பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறு!! “நிறைமாத கரிப்பிணிக்கு கத்திக்குத்து..” -வேலூரில் பதற்றம்!!

இவருடைய தங்கை கிருத்திகா, தனது பிரசவத்திற்காக தாய்வீட்டில் வந்து ...
pregnant women attacked by neoghbour
pregnant women attacked by neoghbour
Published on
Updated on
1 min read

சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது.  அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.  இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் அதிக அளவிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் வாய் வார்த்தையாய் துவங்கிய சண்டைக்கெலாம் கத்தியை எடுத்துக்கொண்டு ஓடத்துவங்கிவிட்டனர் இக்கால இளைஞர்கள். மேலும், பின்விளைவுகள் பற்றி யோசியாதிருப்பது, அதீத கோவமும் மனிதத்தை மறுக்கச் செய்கிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் வேலூரில் நடைபெற்றுள்ளது. பக்கத்து வீட்டு நபருடன், ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டு கையில் கத்தியோடு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததால்  பெரும் பதற்றம் நிலவியது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரிய குளம் பகுதியில் உள்ள ஆர்.எஸ் நகரில் வசித்து வருகிறார் சக்திவேல். இவருடைய தங்கை கிருத்திகா, தனது பிரசவத்திற்காக தாய்வீட்டில் வந்து தங்கியுள்ளார். 

இவரின் அண்ணனுக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசித்து வரும் சதீஷ் என்பவருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு உள்ளது.இதுதொடர்பாக ஆறு மாதத்துக்கு முன்பே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

 இந்த நிலையில் மீண்டும், நேற்று இரவு சக்திவேல் சதீஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் திடீரென ஆத்திரமடைந்த சதீஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சக்திவேலை தாக்கியுள்ளார்.

இதைப்பார்த்த சக்திவேலின் தங்கையும்  9 மாதம் கர்ப்பிணியான்  கிருத்திகா குறுக்கே வந்து தடுக்க முயன்றுள்ளார்.அப்போது கிருத்திகாவின் வலது கையில் கத்தி குத்தி உள்ளது. படுகாயத்தில் கதறி துடித்த கிருத்திகாவை கத்தியுடன் வேலூரில் உள்ள பழைய பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சதீஷை கைது செய்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com