
2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. ஆனால் அதிமுக -வில் இன்னும் அந்த நிலையற்ற தன்மை தொடர்கிறது.
அதிமுக - பாஜக -வின் NDA கூட்டணியில் இருந்ததாக சொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஓபிஎஸ், மற்றொருவர் பிரேமலதா ஓபிஎஸ் அதிகாரபூர்வமாகவே கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டார். பிரேமலதா இன்னும் யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக தான். ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பினார். ஆனால் தேமுதிக -விற்கு வழங்கப்படும் எம்.பி சீட் குறித்த கேள்விக்கு நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என எடப்பாடி நழுவிக்கொண்டார் .
2.59% வாக்குகள் மட்டுமே தேமுதிக -விடம் உள்ளன. ஆகையால் கூட்டணியில் இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்ற போக்கிலே இ.பி.எஸ் இருந்தார். இதனால் தேமுதிக நிர்வாகிகள் அதிமுக மீது செம கடுப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார். தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கினார். திமுக, அதிமுக, பாமக கட்சிகளை தொடர்ந்து தேமுதிக தலைமையும் சுற்றுப்பயணம் தொடங்கியது. தேதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சுற்றுப்பயணத்தின்போது பேசிய பிரேம லதா, “2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளோம். கும்மிடிப்பூண்டியில் உள்ள என உயிரினும் மேலான கேப்டனின் அன்பு உடன் பிறப்புகளே என ஆரம்பித்து பேசிய அவர் , யாருடன் கூட்டணி என அனைவரும் கேட்கின்றனர். ஆடி பெருக்கில் நாம் பிரச்சார பயணத்தை தொடங்கி உள்ளோம். கேப்டன் மறைந்தாலும், முன்பு உயிருடன் இருந்தார், தற்போது தெய்வமாக வருகிறார். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியை மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும்.
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி வர வேண்டும் கூறி விஜயகாந்த கட்சி தொடங்கினார். என் மக்களே, என் மக்களே என மக்களை பற்றி மட்டுமே சிந்தித்தவர் கேப்டன். இனிமேல் தான் தேமுதிக 2.0 ஆரம்பிக்க போகிறது
புதிய அத்தியாயம் கேப்டனின் கொள்கைகளை லட்சியத்தை நிறைவேற்றும். வெற்றி கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும். ஏலாவூர் சுங்கச்சாவடி தொடங்கி 10 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகள் இல்லை, வளர்ச்சி இல்லை, உரிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நீர் நிலைகளை முறையாக தூர்வாரி தண்ணீர் பஞ்சம் இல்லாமல் நமது கூட்டணி பாதுகாக்கும்.
ஏற்கனவே முரசு சின்னத்திற்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த தொகுதி கும்மிடிப்பூண்டி. மீண்டும் இந்த முறை முரசு சின்னத்திற்கு கும்மிடிப்பூண்டி தொகுதியை கொடுப்பார்களா என மக்களை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் கொடுப்பாரா எனக்கேட்டனர், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கேப்டன் ஆலயத்திற்கு மக்கள் வருகிறார்கள். தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும்” என பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.