“நாங்க இருக்க கூட்டணிக்குத்தான் வெற்றி..” அடித்து சொல்லும் பிரேமலதா!! “அந்த கட்சியில” ஏற்கனவே ஹவுஸ்புல்லே…?

இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக பிரம்மாண்டமாக கூட்டணி அமையும்.தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி..
premalatha vijayakanth
premalatha vijayakanth
Published on
Updated on
2 min read

2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. திமுக அதிமுக இருகட்சிகளும் தங்களின் கூட்டணி வேலைகளை துரிதப்படுத்தியுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக தான். ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பி இருந்தார். கடந்த தேர்தலில் தேமுதிக -வின் வாக்கு சதவீதம் மிக குறைவு.

ஆகையால் கூட்டணியில் இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்ற போக்கிலே இ.பி.எஸ் இருந்தார். இதனால் தேமுதிக நிர்வாகிகள் அதிமுக மீது செம கடுப்பில் இருந்தனர்.

ஆனால் தேமுதிக -வின் எம்.பி கனவு கனவாகவே போய்விட, இதற்கிடையில் பிரதான பிராந்திய கட்சிகளான அதிமுக -வும் திமுகவும் புதிய எதிரியான விஜய் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். 8 மாதங்களுக்கு முன்பே கூட்டணி வைத்த அதிமுக - பாஜக தேமுதிக -வை மறந்தே போனார்கள் என்கின்றனர் சில ஆர்வலர்கள். இந்த சலசலப்புக்கு மத்தியில்தான்,  தேமுதிக பொதுச்செயலாளர், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 74 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

“இன்று நடைபெற்ற மாவட்ட செயலர் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு கருத்துக்கள் கேட்டு அறிந்ததாகவும் கூறினார். SIR பற்றி தற்போது பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது எதுவாக இருந்தாலும் தேமுதிக 2026 சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க தயாராக இருக்கிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடாமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் அறிவுரை கூறினார்.

ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் மீட்போம் என்கிற மிகப்பெரிய மாநாட்டில், தேமுதிக யாருடன் கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த ரகசியம் கிடையாது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மிக பிரம்மாண்டமாக கூட்டணி அமையும்.தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி முரசு சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் வேலைக்கு வந்தாலும்  வாக்காளராக  முடியாது. பிறந்த மாநிலத்தில் வாக்களிப்பது தான் சரியாக இருக்கும். சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசும் தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த சட்டமன்றத் தேர்தலில்  த.வெ.க- திமுக இரண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி என விஜய்  கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் அது அவரது கருத்து நான் கருத்து சொல்ல முடியாது நாங்கள் 20 வருடங்களாக கட்சி நடத்தி வருவதாகவும் கூறினார்” 

ஆனால் அதிமுக உடனான பிரிவுக்கு பிறகு, தேமுதிக திமுக -உடன் நல்ல இணக்கம் காட்டி வருவதாகவும், திமுக கூட்டணியில் இவர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திமுக கூட்டணி ஏற்கனவே நிரம்பி வழியும் நிலையில் தொகுதி பங்கீடு என வந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழாமல் இல்லை, எல்லாப்பேச்சுகளுக்கும் ஒரு முடிவு தேர்தல் சாமியத்தில்தான் தெரியும் என சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com