"டெல்லியில் இருந்து தமிழகம் வந்தார் ராகுல் காந்தி.." காங்கிரஸ் பயிற்சி முகாமில் பேசப்போவது என்ன?

இந்த முகாமின் கடைசி நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுவார்.
Rahul Gandhi Chennai visit
Rahul Gandhi Chennai visit
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மேலும், அவரை காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று சந்திப்பதற்காக ஆர்வம் காட்டி முந்தி அடித்துக்கொண்டு சென்றனர். அப்பொழுது அருகில் இருந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அருகே வந்த நபர்களை வெளியே தள்ளினார். அப்பொழுது அங்கிருந்த ஒரு நபர் கீழே விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ராகுல் காந்தி கூறப்பட்டு சென்றார்.

நடைபெற்ற பயற்சி முகாமில், ஒரு மாவட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், 50 ஆண்டுகால காங்கிரசின் வரலாறு குறித்தும், காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து முழுமையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதல் முயற்சி என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமின் கடைசி நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு வருகை தந்துள்ளார்.

இதனையடுத்து, ராகுல்காந்தி நீட் தேர்வால் பலியான மாணவர்களின் பெற்றோரை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேரணியாக செல்ல முற்பட்டபோது, அவரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக அங்கிருந்து தூக்கி சென்றது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முகாமில் கட்சி கட்டமைப்புகளை வளர்க்கவும், கட்சியின் எதிர்காலம் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றிலும், தவெக-வுடன் கூட்டணியில் இருக்கும்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவிரி விவகாரம் தொடர்பாக, அதாவது கர்நாடாவில் ஆட்சிப்பொறுப்பிலும், தமிழ்நாட்டில் ஆளும்கட்சினருடன் கூட்டணியிலும் இருப்பதால் இது குறித்து எவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ- மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com