லாரி டிரைவரின் மகள் செய்த சாதனைகள்.. நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்! யார் இந்த வித்யா ராம்ராஜ்?

அவர் பெருமளவில் பாராட்டப்படுவது பதக்கங்களுக்காக அல்ல, மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 54.75 வினாடிகளில் நிறைவு செய்து தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
Rajinikanth Honors Asian Games Champion Vithya Ramraj After Historic Record-Breaking Win
லாரி டிரைவரின் மகள் செய்த சாதனைகள்.. நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்! யார் இந்த வித்யா ராம்ராஜ்?
Published on: 
Updated on: 
2 min read

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார் வித்யா ராம்ராஜை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம், கலப்பு (Mixed) 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளி மற்றும் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் என ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

அவர் பெருமளவில் பாராட்டப்படுவது பதக்கங்களுக்காக அல்ல, மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 54.75 வினாடிகளில் நிறைவு செய்து தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரு தமிழ் பெண்ணின் இந்த சாதனைகள் வெகுவாக பாராட்டப்பட்டன. பல பிரபலங்கள் அவரை அழைத்துப் பாராட்டுவதுடன் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. முன்னதாக நடிகர் தனுஷ் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருந்தார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் வித்யாவை பாராட்டியுள்ளார். அப்போது இந்நிகழ்வின்போது Chennai District Masters Athletic Association President திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் பயிற்சியாளர் திரு. நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 28 வயதாகிறது. ராம்ராஜ் ஒரு லாரி ஓட்டுநர், சிறுவயது முதலே பல பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வந்துள்ளார் வித்யா.

வித்யாவும் அவரது இரட்டை சகோதரியான நித்யாவும் சிறுவயது முதலே தடகள போட்டிகளில் சிறந்து விளங்கியுள்ளனர். பள்ளி பருவத்தில் இருந்தே பதக்கங்களை குவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசுகையில், "கல்லூரியில் படித்த போதே, நான் தேசிய சீனியர் போட்டியில் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2018ல் வருமான வரித்துறையில் மல்டி டாஸ்கிங் கிளார்க் பணியை பெற்றேன். என் சகோதரி வித்யா, தேசிய அளவிலான பல போட்டிகளில் தங்கம் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2022ல் இந்திய ரயில்வே துறையில் சீனியர் கிளார்க் ஆக வேலைக்குச் சேர்ந்தார்." என பிபிசி செய்திகளிடம் கூறியுள்ளார் நித்யா.

பயிற்சியாளர் நேபால் சிங் ரத்தோரிடம் பயிற்சி பெறுவதற்காக தனது சகோதரிகள் இருவரும் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். அதுவரை ஓட்டப் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த வித்யாவை, நேபால் சிங் தடை தாண்டி ஓடும் போட்டியில் ஈடுபட ஊக்குவித்தார்.

இந்த வியூக மாற்றம், 2023-ல் நடைபெற்ற 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அற்புதத்தை நிகழ்த்தியது. 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷாவின் நீண்டகால இந்திய சாதனையான 55.42 வினாடிகளை சமன் செய்ததன் மூலம், வித்யாவை நாடே திரும்பிப் பார்த்தது.

அந்த ஆண்டு, அவர் தனிநபர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன், நித்யாவுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இரட்டையர்கள் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

அதைத் தொடர்ந்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். இப்போது, 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அடுத்ததாக 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com