

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை தொடங்கிய தபால் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பாராத திருப்பமாக, அமைச்சர் கே. என். நேரு பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்ப கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள் பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் சேவைத் துறையினரின் வாக்குகளாக இருப்பதால், இந்த முன்னிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொகுதி வழக்கமாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் துறை அமைச்சர் கே.என். நேருவின் சொந்தத் தொகுதி என்பதால் திமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படுகிறது. அமைச்சரின் அதீத களப்பணி மற்றும் மக்கள் தொடர்பால் இந்தத் தொகுதியைத் திமுகவின் பாதுகாப்பான இடம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் இம்முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வலுவான போட்டியை வழங்கி வருவது தேர்தல் சூழ்நிலைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தபால் வாக்குகள் என்பது மொத்த வாக்குகளில் ஒரு பகுதியே என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பின் நிலைமை முழுமையாக மாறும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இறுதி முடிவை அறிய அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கைகள் மிக முக்கியமானதாக இருக்கிறது.திருச்சி மேற்கு தொகுதியின் இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்திலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரும் சுற்றுகளில் யார் முன்னிலை பெறுவார்கள் என்பது தேர்தல் களத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.