விஜயபாஸ்கரை மேடையில் வைத்துக்கொண்டே இப்படியா? “விராலிமலை இருண்டு கிடக்கிறது” - தவெக அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது
விஜயபாஸ்கரை மேடையில் வைத்துக்கொண்டே இப்படியா? “விராலிமலை இருண்டு கிடக்கிறது” - தவெக அமைச்சர் பேச்சால் பரபரப்பு!
Published on: 
Updated on: 
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 1384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட 4.37 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழக்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறை கண்காட்சிகளை அமைக்கப்பட்டு அதனை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

நடந்து முடிந்த 2026 பொது தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு விதிசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர். இவர் தனது MLA பதவியி ராஜினாமா செய்த பின்னர், உடனடியாக தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டார். இவர் மட்டுமின்றி இவரின் ஆதரவாளர்கள் பலர் தங்களை தவெக-வில் இணைத்து கொண்டனர்.

இது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை பதவி விலகச் செய்து, குதிரைப் பேரம் மூலம் தவெக தன்பக்கம் இழுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த அத்தொகுதியின் இடைத்தேர்தலை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. தேர்தல் அறிவிப்புகள் வந்தால் விராலிமலை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

காரணம் இதற்கு முன் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும், அதே தொகுதியில் பொது தேர்தலில் வெற்றி பெற்று, பின் ராஜினமா செய்து தவெக-வில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு  வாழ்கைப்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இந்நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெறுவது கவனம் பெறுகிறது. 

விராலிமலை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த நிலையில் அவரும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டார். மேலும் தவெக அமைச்சர்களுக்குதனது  சார்பில் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உறையற்றினார். அவர் பேசியதாவது, “விராலிமலை தொகுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருண்டு போய் இருந்தது. அதற்கு வெளிச்சம் கொடுப்பதற்காக தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்து இந்த தொகுதியை சேர்ந்த 1384 பயனாளிகளுக்கு 4.37 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் விராலிமலை தொகுதிக்கு தேடி தேடி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த தொகுதியை விடமாட்டேம். விராலிமலை தவெகவின் கோட்டை என்றும் பேசினார்.

விராலிமலை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி விஜயபாஸ்கரை மேடையில் வைத்துக்கொண்டு, தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை என அமைச்சர் பேசியது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2011 முதல் 2026 வரை அந்த தொகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பொறுப்பேற்று பணி செய்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் பர்வேஸ், தொகுதி இருண்டு போய் கிடப்பதாக பேசியது சி விஜயபாஸ்கரின் MLA பொறுப்புகளை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com