

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 2-வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. இன்றைய மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இதுவாகும். இதற்கு முன்னதாக, ஆக.13 ஆம் தேதி நடைபெற்ற முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல் மாநாட்டின் மூலம் மாநிலத்தில் சுமார் 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரூ. 58,214 கோடி புதிய உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள், மற்றும் 65,786 புதிய உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் கையெழுத்தாகின்றன.
தவெக அரசு பொறுப்பேற்ற 200 நாட்களில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.73 லட்சம் கோடி முதலீடுகள்,1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மே முதல் கையெழுத்தான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 200 நாட்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டுள்ளது.
இன்றைய மாநாட்டில் கையெழுதான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பின்வருமாறு:
வாகனம் / EV
ராயல் என்பீல்ட் - தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக இருசக்கர மின்வாகனம் (Electric Motor Cycle) உற்பத்தி - ரூ.1,000 கோடி முதலீடு, இதன்மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஹூண்டாய் உதிரிபாக நிறுவனங்கள் - Hwashin Automotive ரூ.850 கோடி + Seoyon E-Hwa - ரூ.520 கோடி = மொத்தம் ரூ.1,370 கோடி, இதன்மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
JK Fenner - சிவகங்கையில் மிகப்பெரிய உற்பத்தி ஆலை - ரூ.900 கோடி. இதன் மூலம் 1,650 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
வெளிநாட்டு முதலீடுகள்
போஸ்கோ (தென் கொரியா) - கிருஷ்ணகிரியில் எஃகு பதப்படுத்துதல் - ரூ.250 கோடி/ 200 பேருக்கு வேலைவாய்ப்பு
WEG (பிரேசில்) - தருமபுரியில் ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலை - ரூ.2,000 கோடி முதலீடு/ 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
PMC Hydraulics (ஸ்வீடன்) - கிருஷ்ணகிரியில் முதல் ஆலை - ரூ.300 கோடி / 300 பேருக்கு வேலைவாய்ப்பு
மொத்தம் பிரேசில், பின்லாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் ரூ.14,798 கோடி நேரடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
ஜவுளி துறை;
ராம்ராஜ், SCM, அவனீதா, KPR, அர்த்தநாரி, LS Mills, GHCL ஆகியவை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம்.
தியாகராஜர் மில்ஸ் + ஜெர்மனி Euro Textiles: விருதுநகரில் பருத்தி ஜாக்கார்டு ஆலை - ரூ.100 கோடி முதலீடு. இத்துறையில் மொத்தம் 9 ஒப்பந்தங்கள் செய்யப்டள்ளது. இதன் மூலம் ரூ.3,928 கோடி முதலீடும், 14,650 வேலைவாய்ப்பு உருவாகும்.
லாஜிஸ்டிக்ஸ் / உலர் துறைமுகம்
12 பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் + உலர் துறைமுகங்கள் - ரூ.15,250 கோடி/ 8,375 பேருக்கு வேலைவாய்ப்பு
தகவல் தொழில்நுட்பப் பூங்கா - ரூ.125 கோடி/ 50 பேருக்கு வேலைவாய்ப்பு
டீப்-டெக் / செமிகண்டக்டர்
Raana Semiconductors - கிருஷ்ணகிரியில் Czochralski படிக வளர்ப்பு தொழில்நுட்பம் - ரூ.150 கோடிமுதலீடு/ 150 பேருக்கு வேலைவாய்ப்பு
பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படயுள்ளது. 78 ஒப்பந்தங்களும் 25 மாவட்டங்களில் பரவியுள்ளது. சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தேனி ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் மட்டும் 18 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.17,413 கோடி முதலீடு செய்ய படவுள்ளது. மேலும் இதன்மூலம் 16,411 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
வான்வெளி மற்றும் பாதுகாப்பு
12 நிறுவனங்கள் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் நிறுவனங்களும் ஒப்பத்தம் செய்துள்ளது.
நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
TIDCO + Chettinad Aerospace Development Alliance - சிவகங்கை கானாடுகாத்தானில் Chettinadu Aeronadu-வில் பிரத்யேக ட்ரோன் தொழில் மையம்.
அமேசான் செல்லர் சர்வீசஸ் - தமிழ்நாட்டு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பு. தகுதியுள்ள புதிய விற்பனையாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலருக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்