``தனிஷ்க் கொள்ளை.. மீனாட்சி தவெக இல்லை" - சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு! புகாரில் சொல்லப்பட்டது என்ன?

இதுகுறித்து பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள தவெக நிர்வாகி, சாட்டை துரைமுருகன் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசுகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.
"Tanishq Heist.. Meenakshi is not with TVK" - Case filed against Saattai Duraimurugan in 3 sections!
``தனிஷ்க் கொள்ளை.. மீனாட்சி தவெக இல்லை" - சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு! புகாரில் சொல்லப்பட்டது என்ன?
Published on: 
Updated on: 
1 min read

நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் துரைமுருகன், சாட்டை என்ற யூடியூப் பக்கத்தை நடத்துக்கிறார். இதில் தினசரி அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தது முதல் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து நையாண்டியாக பேசி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மதுரை தனிஷ்க் கொள்ளை - கைதான மீனாட்சி தவெகவைச் சேர்ந்தவர் என அவதூறு பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர்மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Madurai Tanishq Robbery
Madurai Tanishq Robbery

இதுகுறித்து பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள தவெக நிர்வாகி, சாட்டை துரைமுருகன் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசுகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த நவம்பர் 14ஆம் தேதி யூடியூப் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில் தவெக குறித்து அவதூறு கருத்துகளை பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் துரைமுருகன் அவதூறாக கருத்து தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

"Tanishq Heist.. Meenakshi is not with TVK" - Case filed against Saattai Duraimurugan in 3 sections!
`8 கிராம் தங்கம், பட்டுப்புடவை'.. அண்ணன் சீர் திட்டத்துக்கு என்னென்ன தகுதிகள்? எப்படி விண்ணப்பிப்பது?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.