மீண்டும் வெடிக்கும் தூய்மை பணியாளர் போராட்டம்.! ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்ட போலீசார்..! பரபரப்பில் தலைநகர்!!

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலத்தில் தூய்மை...
sanitation workers protest
sanitation workers protest
Published on
Updated on
1 min read

உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் ஆறாவது மண்டலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 71 நாட்களாக பணியில்லாமல் இருப்பதாக கூறி இன்று சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலத்தில் தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அது மிகப்பெரிய பேசுபொருளானது.

அதன் காரணமாக போராட்டம் பெரிய அளவில் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட கோவை மாவட்டகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய 10 -க்கும் மேற்பட்ட வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com