சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை; '30 நாட்கள்' அவகாசம் - எந்தெந்த பிரிவுகளில் தண்டனை

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Savukku Shankar
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை; '30 நாட்கள்' அவகாசம் - எந்தெந்த பிரிவுகளில் தண்டனை
Published on: 
Updated on: 
1 min read

தனியார் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்ணை அவதூறாகப் பேசி, மிரட்டிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மகாலட்சுமி என்ற செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டது.

சவுக்கு சங்கர் என அறியப்படும் சங்கர், அப்போது இணையத்தில் மகாலட்சுமி குறித்து அவதூறாகவும், அவரது கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் எழுதியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இத்தனை ஆண்டுகள் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களை ஆய்வு செய்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரை குற்றவாளி என அறிவித்தார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவசக்தி, பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டப் பிரிவு மற்றும் ஐபிசி 509 ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

இதனுடன், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கினார்.

சவுக்கு சங்கர் தனது யூடியூப் பக்கத்தில் காவல்துறை மற்றும் அரசு செயல்பாடுகள் பற்றி பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

அவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு வெளியில் வந்தார். இப்போது செய்தி வாசிப்பாளரை அவதூறாகப் பேசிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Savukku Shankar
TVK: கேரளா முதல் மேற்கு வங்கம் வரை.. தவெக கிளைகள் உண்மை இல்லையா.. அதிகாரப்பூர்வ மறுப்புக்கு பின்னணி என்ன?
Savukku Shankar
"தவெக vs அதிமுக" என்று மாறும் களம்.. வெலவெலத்துப் போயுள்ள திமுக.. தாராபுரம், மதுராந்தகம் மக்களின் "ஈகோ"வுடன் மோதும் கட்சிகள்
Savukku Shankar
விஜய்யின் ஜோசியர் முதல் RTI வரை: தவெக அரசு 'U-டர்ன்' அடித்த 8 அறிவிப்புகள்.. என்ன காரணம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com