“1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்.. 10th ரிசல்ட் அப்டேட்?

1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இதுவரை இருந்த பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
schools reopen dates
Published on
Updated on
1 min read

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். நாளை மறுநாள் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் உறுதிசெய்தார்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவேக அரசு முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதையடுத்து துறைசார்ந்த அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் வெளியிட்டார். எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோக அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ராஜ்மோகன் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அதையடுத்து இன்று தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனையில் பள்ளிகள் திறப்பது மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன். 

அதன்படி வரும் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இதுவரை இருந்த பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடதிட்டக்களுக்கான புத்தகம் அச்சிடுதல் பணிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்ற காரணங்களால் ஜூன் 3ம் தேதி வரை இந்த விடுமுறை என தெரிகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அதே பாடத்திட்டமும், ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20) வெளியிடப்படும் எனவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட எண்ணின்ற்கு குறுஞ்செய்தியாக பெற்று கொள்ளலாம் எனவும் தெரியப்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com