பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.. அடம்பிடிக்கும் CM விஜய்? டெண்டர் விவகாரத்தில் யூ-டர்ன் எடுக்க வாய்ப்பு உள்ளதா?

பல்வேறு நிலைப்பாடுகளில் யூ-டர்ன் எடுத்த அரசு தலைமைச் செயலகம் கட்டும் முடிவில் மட்டும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல்
cm vijay
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் அரசு தரப்பில் வெளியிட்ட பல அறிவிப்புகள் எதிர்ப்புகளுக்கு பிறகு திரும்ப பெறப்பற்றுள்ளன. இந்த காலாண்டிலேயே சர்ச்சையான அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து அதனைத் திரும்ப பெற்று வருகிறது. முதல்வர் விஜய்யின் பிரத்யேக ஜோதிடரான ரத்தன் பண்​டிட் வெற்றிவேல் என்பவர் அரசின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என அறிவிப்புகள் வெளியானது. எதிர்ப்புகளுக்கு பின் அது ரத்து செய்யப்பட்டது. அதேபோல் RTI தடை விவகாரம் உட்பட பல அறிவிப்புகளை வாபஸ் பெற்றுள்ளது விஜயின் தவெக அரசு.

இந்த நிலையில் பட்டினபாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவித்திருந்தது. தற்போது வரை அது குறித்த அரசின் சரியான முடிவுகள் வெளிவரவில்லை. அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் செய்லபடுகிறதா என்பது தற்போது அரசியல் வட்டத்திலும் பொதுமக்களிடையேயும் கேள்வியை எழுப்பியுள்ளது.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டப் போவதாக அரசு அறிவித்திருந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி நிலவுவதாகவும், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்திருந்தது. அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் கடலுக்கு அருகே சுமார் 25 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில், 15 மாடிகளுடன் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. 

இந்த திட்டத்திற்கு மீனவ குடியிருப்பு மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தலைமை செயலகம் அமைக்கும் அரசாணைக்கு எதிராக மீனவ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் குறித்து தவெக அமைச்சர்கள் சிலர், இந்த அரசாணை இறுதியான முடிவு அல்ல என்றும குழப்பமான பதில்களை சொல்லிவந்தனர். புதிய தலைமைச் செயலகம் கட்ட மாற்று இடம் பார்ப்பதாகவும் சில அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியானது. 

இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், அங்குள்ள பாழடைந்த பழைய அரசு ஊழியர் குடியிருப்புகளை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானதும், அரசு பட்டினப்பாக்கத்தில் தான் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றே அனைவரும் கருதினர்.

பல்வேறு நிலைப்பாடுகளில் யூ-டர்ன் எடுத்த அரசு தலைமைச் செயலகம் கட்டும் முடிவில் மட்டும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், உறுதியான முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுவரை இது குறித்து முதல்வர் விஜய் எந்த இடத்திலும் பேசவில்லை, எனவே இந்த விவகாரத்தில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்