

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைசர் செம்மலை அறிவித்துள்ளார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஈகோவை விட்டுவிட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய, புரட்சி தலைவி அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?” - என செம்மலை வருத்தம் தெரிவித்தார். அதையடுத்து “அதிமுகவில் இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிற போது தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை” என்றும் கட்சியில் இருந்து விளக்குவதற்கு இதுதான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் “அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சதி ஏதும் காரணமாக இருக்கும் என நான் கருதவில்லை” என்றும் தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய அவர் “வேறு கட்சியில் இணைவதாக இதுவரை எந்த எண்ணமுமும் ஏற்படவில்லை. அந்த பேச்சுக்கும் இப்போது இடமில்லை" என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த செம்மலை, “அந்த அளவிற்கு நாம் நம் இயக்கத்தை வலுவான இயக்கமாக கட்டிக்கொள்ள தவறிவிட்டோம்" என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் "அதிமுகவில் ஒற்றுமை இருந்திருந்தால் எங்களை யாரும் எதுவும் செய்திருக்க முடியாது" என்றும் "தாயற்ற பிள்ளையாக அதிமுகவினர் தவித்துவருவதாக" வருத்தம் தெரிவித்தார்.
“அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவிற்கு பாஜக காரணம் இல்லை, அவர்கள் தான் எங்களை இயக்குகிறார்கள் எனும் குற்றசாட்டை நான் ஏற்கவும் மாட்டேன” என திட்டவட்டமாக கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் செம்மலை. "தவெக-விற்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பே கட்சியின் பொதுசெயலாளருடன் இணைந்து பேசி முடிவெடுத்திருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.