

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “DUDE” இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பிரதீப் “லைஃப்ல ஒரு விஷயத்தை நீ லெப்ட் ஹண்ட்ல டீல் பண்ண.. லைஃப் உன்னை லெப்ட் ஹண்ட்ல டீல் பண்ணிட்டு போய்டும்” என பேசியிருப்பார். இந்த டயலாக் வெளியாகி மக்களிடையே பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்போது அது போல ஒரு டயலாக்கை தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில் நேற்று அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் சென்னை பனையூரில் விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தமிழக வெற்றி காலத்தில் இணைந்தார். பின்னர் அவருக்கு தவெக-வில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் கோவை,ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பதிவு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் “அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான், அதிமுக இயக்கம் தொடங்கும் போது அவருக்கு பின்னால் நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975 ஆம் ஆண்டு பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியத்திற்கு என்னை கட்டி தழுவி பாராட்டியவர் எம்ஜிஆர். அவர் மறைந்த பிறகு இயக்கம் இரண்டாக உடைந்தும் அதில் புரட்சி தலைவி அம்மாவுடன் எனது பயணத்தை மேற்கொண்டேன். அம்மா அவரது சுற்று பயணங்களை மேற்கொள்ளும் போதும் சரி சில முக்கியமான ஆலோசனைகளை கேட்கும்போதும் சரி நான் அந்த பணிகளை மேற்கொண்டிருக்கிறேன்.
அப்போது இருந்த காலம் இப்போது இல்லை எல்லாம் மாறிவிட்டது. பின்னர் இயக்கம் மூன்றாக உடைந்தது பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பணிகளை மேற்கொண்ட போது முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள். பின்னர் உறுப்பினர் பதவியை எடுத்துவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் உழைத்த என்னை அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கி பரிசு கொடுத்தார்கள். இப்போது நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ‘நான் என்று ஒருவர் நினைத்தால் ஆண்டவன் தான் என்று கண்டித்துவிடுவார்’ என பிரதீப் ரங்கநாதன் போல ஒன்லைனில் பேசி மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்திருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.