மின்துறை அமைச்சர் 'ராஜினாமா' செய்ய வேண்டுமா? நிர்மல் குமார் பதிவை தோண்டி எடுத்த செந்தில் பாலாஜி.. திமுக அரசுடன் ஒப்பிட்டு கேள்வி!

கடந்த ஐந்து வருடத்தில் 4349 மெகாவாட் மின்சாரத் தேவை அதிகரித்தது. அப்போதும் கூட, எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்கிய அரசு, திராவிட மாடல் அரசு.
Should the Electricity Minister Resign? Senthil Balaji Digs Up Nirmal Kumar’s Old Post and Compares It with the DMK Government
மின்துறை அமைச்சர் 'ராஜினாமா' செய்ய வேண்டுமா? நிர்மல் குமார் பதிவை தோண்டி எடுத்த செந்தில் பாலாஜி.. திமுக அரசுடன் ஒப்பிட்டு கேள்வி!
Published on: 
Updated on: 
2 min read

தமிழ் நாட்டில் மின்வெட்டு தினசரி பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் 35 ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையிவள் செய்தியாளர்களை சந்தித்துள்ள திமுக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசின் முடிவைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

கவலை இல்லாத டம்மி முதலமைச்சர்..

அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் மின்வெட்டை பற்றி பேசாத நட்கள், போராடாத நட்கள் இல்லவே இல்லை என்ற நிலைமை உள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு நடக்கிறது. மின்சார துறை அமைச்சரும், நீதிபதிகளும் பங்கேற்ற சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு நடந்தது. அதற்கு மின்சார துறையினருடைய விளக்கம், பின்னர் அமைச்சருடைய விளக்கம், அதற்கு பிறகு மின்சார துறையின் விளக்கம் நீக்கம், இப்படியெல்லாம் நடக்கிறது. உச்சபட்சமாக தலைமை செயலகத்தில் மின்வெட்டு நடக்கும் அளவு இன்றைய ரீல்ஸ் ஆட்சி மிக மோசமாக உள்ளது.

வெறும் ரீல்ஸை மட்டும் மக்களிடத்தில் எடுத்துச் சென்று, மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தக்கூடிய இன்றைய டம்மி முதலமைச்சர், ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மக்களுக்கு ஏற்படும் இடர்கள் பற்றி கவலைபடாத அரசாக, இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது." என்றார்.

எதையாவது பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார்

மேலும், "மின்சாரத்துறை அமைச்சர் அவருடைய துறையைத் தவிர மற்ற எந்த துறையிலிருந்து கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார். அவருடைய துறையில் கேள்வி கேட்டால், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஒரு கேள்வி கேட்கும்போது அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது அமைச்சருடைய கடமை. அதற்கு தீர்வு காணவேண்டியது அரசினுடைய அந்த துறையினுடைய கடமை.

மின்வெட்டை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசாக தவெக அரசு உள்ளது. கொஞ்ச காலமாக பியூஸ் கேரியர்கள் காணாமல் போய்விட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகு துறையில் கருப்பாடுகள் இருப்பதாக சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொரு காரணமாக அடுக்கிக்கொண்டு வந்த மின் துறை அமைச்சர் கடைசியாக பஞ்சாப்பில் 15 நிமிடம் பவர்கட் நடக்கிறது என பேசும் அளவு மோசமான ஒரு சூழ்நிலையில் இன்றைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது." என்றார்.

Resign EB Minister?

தொடர்ந்து பேசிய அவர், "எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்து கொண்டே சென்றது. 2020-21 இல் 16000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. 2025-26 இல் 20000-த்துக்கும் மேல் மெகாவாட்டாக மின் தேவை இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் வெறும் 1000 மெகாவாட் மட்டுமே மின் தேவை உயர்ந்தது. கடந்த ஐந்து வருடத்தில் 4349 மெகாவாட் மின்சாரத் தேவை அதிகரித்தது.

இப்படி தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்த போதும் கூட, எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்கிய அரசு, திராவிட மாடல் அரசு. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 2023 இல் இன்றைய மின் துறை அமைச்சர் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள், Resign EB Minister" என பதிவு போட்டிருக்கிறார். இன்றைய திமுக அரசு 35 ரூபாய்க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது.

பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின்சார அதிகமான மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் என்பதனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகபட்சம் பொங்கலுக்கு முன்பே அதுக்காக ஒரு டெண்டர் விட்டு, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். நம்முடைய பிளாண்டில் ஏதாவது ரிப்பேர் ஆகிவிட்டால் மட்டுமே வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இன்றைய அரசு முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் வாங்கும் விலைக்கு மின் துறையை தள்ளி இருக்கிறது." என்றார்.

Should the Electricity Minister Resign? Senthil Balaji Digs Up Nirmal Kumar’s Old Post and Compares It with the DMK Government
இடைத்தேர்தலில் அரைகுறை வெற்றி?.. ஆனாலும் உள்ளாட்சி "டென்ஷன்"! தவெக தலைமை என்ன முடிவெடுக்கும்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com