
சிவகங்கை; சிங்கம்புணரி அருகே உள்ள மலங்கொட்டை என்ற கிராமத்தில் மெகா மெட்டல் குவாரி என்ற பெயரில் கல்குவாரி ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினக்கூலிகளாக வேலைபார்த்துவருகின்றனர். இங்கு விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் மழை பெய்திருந்த நிலையில் இன்று காலையில் பாறையை வெடி வைத்து உடைக்கும்போது பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பறை சரிவில் சிக்கி 5 -பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயம பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடன் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , "மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்த இடிபாடில் சிக்கி முருகானந்தம், கணேஷ், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, ஒரிசாவைச் சேர்ந்த அர்ஜித் ஆகியோர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
குவாரி பகுதியில் இறந்தவர்களை பார்வையிட உறவினர்களையும் செய்தியாளர்களையும் காவல்துறை அனுமதிக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்