சீமானுக்கு 'சிவகார்த்திகேயன்' அரசியல் அட்வைஸ்.. இடைத்தேர்தல் மேடையில் சலித்துக்கொண்ட நாதக தலைவர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான் நடித்த LIK திரைப்படம் கவனிக்கப்பட்டது. தற்போது சிவகார்த்திக்கேயன் நடிப்பில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
Seeman, Sivakarthikeyan
சீமானுக்கு 'சிவகார்த்திகேயன்' அரசியல் அட்வைஸ்.. இடைத்தேர்தல் மேடையில் சலித்துக்கொண்ட நாதக தலைவர்!
Published on: 
Updated on: 
1 min read

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐந்துமுனை போட்டி நடைபெறும் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி, ஆளும் கட்சி மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மதுராந்தகத்தில் வேட்பாளர் ஜனாகிராமனை ஆதரித்து நேற்றையதினம் பிரசாரம் செய்தார் சீமான். அப்போது அரசியலை விட்டு விலக சிவகார்த்திகேயான அறிவுறுத்தியதாகப் பேசியது கவனம் பெற்றுள்ளது.

மேடையில் பேசிய சீமான், "என் தம்பி சிவகார்த்திகேயன் கூட "விடுங்கண்ணே, வந்து பேசாம நடிச்சிட்டு இருங்க.மக்கள் தேடட்டும்" என்று சொன்னான்.

"இவன் என்னைக்கும் தேட மாட்டான்டா, இவனுக்கு என்னடா இருக்கு? இவன் தேடி இருந்தாதான் அண்ணன் ஜெயிச்சிருப்பேனே" என்று பதில் சொன்னேன்.

நான் மறுபடியும் சினிமாக்கு போறேன். நான் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கினால் "மாயாண்டிக் குடும்பத்தில் சூப்பராக நடிச்சிருக்கீங்க" என்றுதான் சொல்றான்.

இந்த நாடு விளங்குமா? நடிச்சாதான் ஓட்டு போடுவீங்கன்னா, நான் நடிக்கப் போறேன்.

உனக்காக (மக்களுக்காக) அழுகிற ஒரு சொட்டு கண்ணீரும் வேஸ்ட்.

Seeman in Seyon
Seeman in Seyon

சீமான் மேடையில திட்டுறாருன்னு சொல்றார்கள். திட்டாமல் உங்களை என்ன கொஞ்சவா செய்வார்கள்?

அக்கறையில்தான் திட்டுறேன். 60 ஆண்டுகள் திமுக, அதிமுகன்னு மாறி மாறி போட்டு நாசம் பண்ணீங்க.

இப்ப இவருக்கு போட்டு இருக்கீங்க. ஆறு மாசத்தை தாங்க முடியல." எனப் பேசினார்.

சமீபகாலங்களில் மீண்டும் சினிமாக்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த LIK திரைப்படம் கவனிக்கப்பட்டது. தற்போது சிவகார்த்திக்கேயன் நடிப்பில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

'தாய் கிழவி' படத்தின் மூலம் அறியப்பட்ட சிவகுமார் முருகேசன் சேயோன் படத்தை இயக்குகிறார். நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் படப்பிடிப்பில் உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சீமான் படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Seeman, Sivakarthikeyan
"காரை ஓட்டிக் கொண்டே விஜய் என்னிடம் கேட்ட 'அந்த' கேள்வி.. ஒரு நொடி ஸ்தம்பிச்சு போயிட்டேன்" - இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் போட்டுடைத்த சீமான்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com