"காரை ஓட்டிக் கொண்டே விஜய் என்னிடம் கேட்ட 'அந்த' கேள்வி.. ஒரு நொடி ஸ்தம்பிச்சு போயிட்டேன்" - இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் போட்டுடைத்த சீமான்

"யார் உனக்கு இந்த யோசனை எல்லாம் கொடுக்கறான்னு" சீமான் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்...
seeman
Published on
Updated on
2 min read

கடந்த சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. 50 சதவீதம் ஆண் வேட்பாளர்கள், 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் என்ற நிலைப்பாட்டுடன் தேர்தலை சந்தித்தது. இந்த அரசியல் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் MLA-கள் ராஜினாமா செய்ததை அடுத்து இரு தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது நாம் தமிழர் கட்சி. தாராபுரத்தில் போட்டியிட்டு தோற்ற கார்த்திகாவையே மீண்டும் வேட்பளராக அறிவித்துள்ளனர். அதையடுத்து அவரை ஆதரித்து தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  

நேற்று தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசு குறித்து விமர்சித்து பேசியிருந்தார். “ஊழல் சக்தி ஊழல் சக்தி னு சொல்லிட்டு ஊழல் சக்தியில் வென்று வந்தவங்கள.. சேர்த்துகிட்டு இடைத்தேர்தல் நிற்க வைக்கிறார். அவர் என்ன வாஷிங் மெஷின் வச்சிருக்காரா? துவைச்சு தூய்மை படுத்திருவாரா? என்று கட்டமாக விஜயை விமர்சித்தார். அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த மரகதம் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதை மறைமுகமாக சாடி இருந்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் ஒரு இடத்துல விஜயை பாராட்ட வேண்டும் என தொடங்கி, என் தம்பியும் நானும் வாகனத்தில் பயணிக்கும் போது திடீரென, “காங்கிரஸ் கூட சேர்த்துக்கலாமான்னு? விஜய் கேட்டதாகவும், அதற்கு “என்னடா என்ன கேள்வி கேக்கற நீ.. யார் உனக்கு இந்த யோசனை எல்லாம் கொடுக்கறான்னு” சீமான் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார். 

விஜயின் கேள்விக்கு “காங்கிரஸ் கூட சேர்ந்துக்கிட்டு என்ன அரசியல மக்களுக்கு முன்னெடுப்பா? கட்சத்தீவை பேசுவியா காவேரி நதிநீர் உரிமை பேசுவியா? இல்ல மொழி கொள்கை பேசுவியா? இல்ல ஈழவிடுதலை? எதையுமே பேச முடியாது. அவன்தான் இந்த நாட்டில் இருக்கிற மொத்த தீமைக்கும் காரணம் அவன்தான்” என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நம்மாழ்வார் கூறிய வாசகத்தை நினைவு கூறினார். அதில் “உலகத்தில் இருக்கிற எல்லா தீய திட்டங்களுக்கும் வேர் தேடி போனால் அமெரிக்காகாரன் கையில் தான் இருக்கும்.. இந்தியாவில் இருக்கிற எல்லா தீய திட்டங்களுக்கும் வேர் தேடி போனால் அது காங்கிரஸ்காரன் கையில் தான் இருக்கும்” என்றும் கட்டமாக காங்கிரேஸை சாட்டினார்.

இந்த ஊழல் லஞ்சத்தை ஒழிப்பதாக சொல்கிறார்கள்.. அவருக்கே 100 கோடி வரி செலுத்த சொல்லி சிபிஐ வழக்கு இருக்கு. பிளாக் டிக்கெட் வித்தவன் எல்லாம் எங்கள திரல்நிதின்னு கேலி பண்ணிட்டு இருக்கான். அதைவிட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டிக்கெட்டை பிளாக்கில் விற்றவிட்டு எங்களை திரல்நிதினு சொல்றகிறார்கள். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com