
தருமபுரியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முப்பெரும் விழா நடந்தது இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். தருமபுரி மாவட்ட விசிக வரலாற்றில் தேர்தல் ரூ.50 லட்சம் நிதி வழங்கும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அரூர் 30, தருமபுரி 50 இலட்சம் என 80 இலட்சம் வழங்கியுள்ள முதல் மாவட்டம் தருமபுரி தான்.முதன் முதலாக ஒரு பொதுக்கூட்டம் நடத்துவது என்பதே, ஒரு போராட்டம். பேருந்தில் தான் கூட்டத்திற்கு வந்தேன். சமூக வலை தளங்களில் திருமாவளவன் வருகிறார் என பதிவிட்டால், இலட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிடுகின்றனர்.
விசிக தமிழக அரசியலில் விர்க்க முடியாத சக்தி என்பதை, நமது கொள்கை பகைவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் பேசும் அரசியலுக்கும், அவர்கள் பேசுகிற அரசியலுக்கும் ஒத்துவராது. அம்பேத்கர், பெரியார், மார்க்சிய சிந்தனைக்கு எதிரானவர்கள் தான் நம் கொள்கை பகைவர்கள். நாம் வலுவாக வளர்கிறோம் என்ற பொறாமை உணர்ச்சியோடு, நமக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடுகிறார். நாம் ஆளும் கட்சியில்லை. அடுத்த முதலமைச்சர் என்று தம்பட்டம் அடிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பலபேர் கிளம்பியிருக்கிறார்கள். நான் தான் முதலமைச்சர் என்று.
நாம் அதிகார பசிக்கொண்டு அரசியலுக்கு வரவில்லை. கொள்கை பசியோடு வந்தவர்கள். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்கள். நமக்கும் மற்றுவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். எங்கள் பயணத்தில் தேர்தலும் ஒரு திட்டம் தான். அதிகாரத்தின் ஆகாத நாங்கள் கட்சி தொடங்கவில்லை. எங்கள் இலக்கு சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பது தான். எங்களுக்கு முதலமைச்சர் நாற்காலி இல்லை. முதலமைச்சர் நாற்காலிக்காக நாங்கள் போட்டிப்போடவில்லை. ஆனாலும் நம்மைத் தான் விமர்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் விசிக தவிர்க்க முடியாத சக்தி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.
நாம் உண்மையான அம்பேத்கர், பெரியாரின் பிள்ளைகளாக இருப்பதால் தான், நம்மை தவறாக பரப்ப வேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் இருப்பவர்கள் அவர்கள் கோணத்திலே நம்மையும் பார்க்கிறார்கள். அதிகாரத்திற்காகவும், பொருளாதரத்திற்காகவும் மயங்கி போனவர்கள் இல்லை விசிகவினர்.
திமுகவை விட கூடுதலாக சீட் கொடுக்க சிலர் தயாராக இருக்கிறார்கள். சீட் தான் முக்கியம் என்றால் நாங்கள் போயிருப்போம். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் நோக்கம். இன்றை அரசியலில் அம்பேத்கரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். அம்பேத்கர் கண்ட கனவை நிறைவேற்ற, அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், கொள்கை பிடிப்போடு உள்ள கட்சிகளுடன் இருக்கிறோம்.
தினந்தோறும் நம்மை பற்றி பேசித்தான் ஆக வேண்டும். எதிர்த்தோ , ஆதரித்தோ, சிறுத்தைகளை பற்றி பேசியாக வேண்டும்.
இன்றைக்கு தேசிய அளவில் பாஜக வலிமை பெறுவது நாட்டுக்கு நல்லதல்ல. பாஜக, ஆர்எஸ்எஸ், சங்க் பரிகாரங்களை எதிர்க்க வேண்டும் என ராகுல் வெளிப்படையாக சொல்கிறார், அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தைக் கொண்டு பாஜகவை வீழ்த்த நமக்கு தேவையான நட்பு சக்தி காங்கிரஸ் தான். இந்தியா கூட்டணி தான். 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்தியா பிளாக். இந்த கூட்டணியின் தலைவர்களுக்கு அறிமுகமான ஒரே கட்சி, விசிக தான். இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் கூட்டணி தான்.
தமிழ்நாட்டு நலனுக்காக போராடுகிறோம். சாதி தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியா முழுவதும் உள்ளது. சாதிய கட்டமைப்பு நீடிப்பதற்கு மனு ஸ்மிருதி என்ற மனுதர்ம கோட்பாடு உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கான தேவை நமக்கு இருக்கிறது. நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், நம்மை சீண்டுகிறார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கும் போது, எஸ்பி இளைஞர்கள் செல்வார்கள் என்று சொன்னார்கள். இப்போதும் விஜய் வந்தவுடன் அப்படி சொல்கிறார்கள். நான் பதற்றம் அடைவதாக சொல்ககறார்கள். 90 கமில் நான் பேசிய பேச்சு, இந்த கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. திருமாவளவன் வேர்க்கால்களில் இருந்து அங்குளம் அங்குளமாக வளர்ந்தவன். 35 ஆண்டுகால அரசியல் அனுபவம். நம்மை சீண்டினால் கூட பரவாயில்லை. குறைந்து மதிப்பிடுகிறார்கள். விஜய் கட்சி தொடங்கியதும் வெளியே போகிறான் என்றால், அவன் பதறுகள் போன்றவர்கள். ஒன்றிரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்தேன். சங்கிகளோடு சேர்ந்து கொண்டனர். என்னோடு இருப்பவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை கொண்டவர்கள். அதனால் தான் நான் சொல்வது எங்கள் களப் வேறு, உங்கள் களம் வேறு. நான் உங்களோடு போட்டிப்போட வரவில்லை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை சிதறடித்து, திமுக வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் எடப்பாடி, விஜயின் எண்ணம். இதுதான் பாஜகவின் திட்டம். மூன்று ஒன்றாகி விடுவார்கள்
அதிமுக, பாஜக, விஜய் மூவரும் திமுக கூட்டணிக்கு எதிரான கட்சிகள். நம்மை சீண்டுவார்கள். திமுக கூட்டணியை விட்டு வேளியே வந்தால், நம்மை சீண்டமாட்டார்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களை சீண்டி வெளியேற வைப்பது தான் அவர்கள் நோக்கம். தேர்தல் நெருங்குவதால், கவனமாக இருக்க வேண்டும் . எவனாவது எதையாவது சொன்னால், நீங்கள் சமூக வலைதளங்களில் எழுதக்கூடாது. நமது பயணம் நீண்ட பயணம். நம் அம்பேத்கர் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அம்பேத்கர் கொள்கையை இந்தியளவில் பேசும் கட்சி விசிக. அம்பேத்கர் சாதி பெருமை பற்றி பேசியதில்லை. அம்பேத்கரை ஏற்றுக் கொள்ளாத தலித் இயக்கங்கள் இருந்துள்ளது.
திமுக, பெரியார், திராவிட அரசியலை பற்றி பேசுகிறார்கள். அதற்கு நாம் பதில் சொன்னால், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாம் பேசுகிற அரசியலும், பெரியார், அம்பேத்கர் அரசியலில் தான். பெரியார் பற்றி, திமுக, திக மட்டும் தான் பேச வேண்டும் என்பதில்லை. நம்மை விமர்சிப்பவர்கள் நாம் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை.திருமா இல்லையென்றால், திமுக கூட்டணியை ஊதி தள்ளிவிட்டு போயிடுவோம் என்று நினைக்கிறார்கள். திராவிட அரசியலை விசிக எந்தளவிற்கு பாதுகாத்து வருகிறோம் என்பது தெரிகிறது. விசிக தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போல் கிராமத்தை பாதுகாக்க வேண்டும்” என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.