மகளுக்காக தாய் எடுத்த அதிரடி முடிவு...முதலமைச்சரை நேரில் சந்தித்த மாணவியின் தாயார்...!

மகளுக்காக தாய் எடுத்த அதிரடி முடிவு...முதலமைச்சரை  நேரில் சந்தித்த மாணவியின் தாயார்...!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.  

மாணவி உயிரிழப்பில் மர்மம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

500க்கும் மேற்பட்டோர் கைது:

தொடர்ந்து மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்:

தொடர்து பள்ளி மாணவி உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவியின் தாயார் செல்வியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும், மாணவி இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். 

நடைபயணம்:

இந்த சூழலில், மாணவியின் தாயார் செல்வி கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பெரிய நெசலூரிலிருந்து  வருகிற வெள்ளிக்கிழமை நடைபயணமாக புறப்பட்டுச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க இருப்பதாக கூறினார். மேலும், தனது மகள் இறப்பிற்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சரிடம் மனு: 

இதையடுத்து முதல்வரை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, இன்று நடைப்பயணமாக சென்னை தலைமைச் செயலகம் வந்தடைந்த மாணவியின் தாயார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு மனு வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com