“ஓபிஎஸ் -க்கு ஸ்டாலின் கொடுத்த முக்கியத்தும்…! விஜய் -க்கு வந்த புது நெருக்கடி!!

கூட்டணியில்உள்ள வைகோவுக்கேபத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் -ஐ, ஸ்டாலின் உதய நிதியுடன் 30 நிமிடங்கள் சந்தித்து பேசியது ...
stalin meets ops
stalin meets ops
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் இன்னும் சில  மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி  இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில்  இருந்தே பஞ்சாயத்துதான். பமாக -விலும் சூழ்நிலை சரியாக இல்லை. 

உண்மையில் இபிஎஸ் எப்படி  சமாளிக்க போகிறார் எனும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன். இந்த நிலையில் ஒபிஸ் -ம் தனது  தனது ஆட்டத்தை துவங்கிவிட்டார். 

சின்ன ரீவைன்டர் 

 அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி  "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன்  ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.

இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. தர்மயுத்த காலகட்டத்தில் ஓபிஎஸ் - ஐ எப்போது வேண்டுமானாலும் பார்க்க தயாராக இருந்த பிரதமர், விமான நிலையத்தில் கூட அவரை பார்க்க விருப்பம் காட்டவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பன்னீர்  செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களின் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “பாஜக ஒரு மதவாதக் கட்சி,  தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் சீரழிந்துதான் போகும். வருகிற 2026 தேர்தல் திமுக -தவெக -வுக்கான போட்டியாக அமையப்போகிறது.. விஜய் ஓபிஎஸ் உடன் கரம் கோர்த்தால்  தமிழகத்தின் மிகப்பெரும் மாற்றம் நடக்கும் என்றெல்லாம் பேசியிருந்தார். பாஜக -வை தீவிரமாக ஆதரித்து வந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென பாஜக எதிர்ப்பை நிலைநாட்டியதன் காரணம், NDA கூட்டணியில் இருந்து அவர் விலக்கப்பட்டதால் தான் என பேசப்பட்டது.  அதனை உறுதி செய்யும் விதமாக, தற்போது, பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சில  நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் விலகிய அன்றே முதல்வர் ஸ்டாலினை  அடையாற்றில் உள்ள முதல்வர் இல்லத்திலேயே சென்று சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், ஓபிஎஸ் -ன் மகன் ரவீந்திரனும் உடன் இருந்தனர்“ சந்திப்பை  முடித்து செய்தியலர்களிடம் பேசிய ஓபிஎஸ் “அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது. அதற்க்கு வரலாறே சான்று, தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கூட்டணியில் இருந்து விலகியத்திலிருந்து தற்போது வரை பாஜக -விடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனக்கு சுயமரியாதை உண்டு" என பேசி இருந்தார்.அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என சொல்வதன் மூலம், திமுக -உடன் சேர வாய்ப்புள்ளது என்பது வெளிபடையாக தெரிகிறது.

தவெக விடுத்த அழைப்பு!

இநிலையில் ஓபிஎஸ் -ஐ விஜய் -ன்  தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு  அழைப்பதாக தகவல்கள் கசிகின்றன. உண்மையில் ஓபிஎஸ் - ஆல் விஜய்க்கு ஏதேனும் லாபம் உண்டா என்றால் நிச்சயமாக உண்டு. தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகளை பண்ணேர் செல்வத்தால் பெற்றுக்கொள்ள முடியும். இதனை கனன்க்கு போட்டுதான் விஜய் தரப்பு பனீர் செல்வதை அழைப்பத்தாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால் ஓபிஎஸ் விஜய் தரப்பை அலைக்கழிபதாகவும்  சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் ஏற்கனவே மூன்று முறை இடைக்கால முதல்வராக இருந்த ஓபிஎஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்தால் பெரிய போஸ்டிங் தர வேண்டும் எனவும், திமுக -தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், (கூட்டணியில்உள்ள  வைகோவுக்கேபத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் -ஐ ஸ்டாலின் உதய நிதியுடன் சந்தித்து பேசிய புகைப்படங்கள் உண்மையில் ஸ்டாலின் அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காண்பித்தன) தான் வைக்கும் அனைத்து டிமாண்டுகளுக்கும்  சமாதிக்க வேண்டும் எனவும் நெருக்கடி கொடுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com