2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு வந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி கூற சென்ற மு.க. ஸ்டாலின் தொண்டர்கள் புடைசூழ சென்ற மு.க. ஸ்டாலின் சென்றார். அவருடன் சேகர் பாபுவும் உடன் இருந்தார். மாலையில் நன்றி கூற சென்ற நிலையில் தொண்டர்கள் மிகுந்த வேதனையில் கண்ணீரோடு காணப்பட்டனர்.
சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல தொகுதிகளில் திமுக வேட்பளர்களை தவெக வேட்பாளர்கள் தோல்வியை தழுவ வைத்தனர். கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவிய போதிலும், மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றார் ஸ்டாலின். தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுத நிலையில் சேகர் பாபுவும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். சென்னை துறைமுகம் தொகுதியில் சேகர் பாபு வெற்றி பெற்ற நிலையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியை தழுவினார்.
மக்கள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ மு.க. ஸ்டாலின் சென்ற நிலையில் தொண்டர்கள் கண்ணீர் மல்க நின்ற நிலையில் அவர்களை பார்த்து 'அழவேண்டாம்' என்று கையசைத்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின். மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் ஸ்டாலின் அருகில் இருந்த சேகர் பாபு கதறி கதறி அழுத கட்சி காண்போரை வேதனையில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டின் ஒரு முன்மாதிரித் தொகுதியாக இதை மாற்றுவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியதிலும், ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றியதிலும் பெருமிதம் கொண்டு, இன்று எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்" என்று உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார். கொளத்தூர் மக்களுக்காக 15 ஆண்டுகள் பணியாற்றியதை அங்கு நினைவு கூர்ந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.