"'வெற்றி' ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா? - வேளாண் பட்ஜெட்டை சாடிய ஸ்டாலின்!"

பட்ஜெட் உரை விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
"முதலமைச்சருக்கு பாராட்டுமழை... 'வெற்றி' ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா?" - ஸ்டாலின் கேள்வி!
"முதலமைச்சருக்கு பாராட்டுமழை... 'வெற்றி' ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா?" - ஸ்டாலின் கேள்வி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மீது வெறும் "ஸ்டிக்கர்" ஒட்டும் முயற்சி என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில்,

"வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சி குளிர பாராட்டு மழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

"முதலமைச்சருக்கு பாராட்டுமழை... 'வெற்றி' ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா?" - ஸ்டாலின் கேள்வி!
“கரூர் சம்பவத்தில் திமுக கைது நடவடிக்கை எடுக்கவில்லை” - தவெக அரசின் நிலைப்பாடு என்ன?.. மீண்டும் பேசுபொருளான 41 பேர் உயிரிழப்பு!
"முதலமைச்சருக்கு பாராட்டுமழை... 'வெற்றி' ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா?" - ஸ்டாலின் கேள்வி!
"மேகதாது, காவிரி, பட்ஜெட்... விவகாரங்களால் கொந்தளித்த திமுக-வினர்!" கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com