“MLA ஷாப்பிங்கில் மும்முரமான CM” - முக ஸ்டாலின் காட்டம்! சூடுபிடிக்கும் தாராபுரம் பிரச்சாரம்.. விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலளிப்பாரா?

"சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.."
முக ஸ்டாலின்
Published on: 
Updated on: 
2 min read

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அமராவதி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய அவரது ரோடு ஷோ, பொள்ளாச்சி சாலை, பெரிய கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. வழிநெடுகிலும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கு இருக்கும் மளிகை கடைக்கு சென்றும் பொதுமக்களை சந்தித்தும் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இன்று மாலை நடைபெறும் தாராபுரம் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளதால், இடைத்தேர்தல் பிரச்சாரம் மேலும் அனல் பறக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய், பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் விஜய் தவெக ஆட்சியின் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்டார். மேலும் திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். இன்று முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், விஜய்யின் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பாரா, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் தவெக அரசின் குறைகளை எடுத்தப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தவெக மற்றும் விலைவாசி குறித்து தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பி தனது X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டறிந்ததாகவும், அதில் 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக ஸ்டாலின்

“அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” என்று காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திராவிட ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.

முக ஸ்டாலின்

இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாகச் செய்திகள் வருகின்றன. பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com