“என் புள்ளய கொன்னுட்டாங்க… கரூர்லதா இந்த அராஜகமே” - கூட்டநெரிசலில் மகனை இழந்த தாய் கதறல்!!

கரூர்லதா இந்த அராஜகமே.. விஜய் உள்ள வர்றதுக்குள்ள....
stampede on tvk campaign
stampede on tvk campaign - pc DW
Published on
Updated on
1 min read

கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 -பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட 50 -பேரின் குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்கு துயரில் ஆழ்ந்துள்ளனர், இந்த கூட்டத்தில் தனது மகனை இழந்த தாய் “என் புள்ளைய கொன்னுட்டாங்க..இதுக்கு முன்னாடி எந்த ஊர்லையும் யாரும் சாவல… கரூர்ல தான் இந்த அராஜகமே.. விஜய் உள்ள வர்றதுக்குள்ள ஆம்புலன்சு வந்துடுச்சி..இதுல எதோ சதி இருக்கு” என அவர் கதறி அழுதது மனதை கனக்கச் செய்தது. இன்னும் சில உள்ளூர் வாசிகள், அடிப்படை வசதிகள் இல்லை, மேலும் விஜய் தாமதமாக வந்தது இந்த பேரிடருக்கு காரணம் என சொல்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com