மதுரையில் திடீரென பெய்த மழை; மருத்துவமனையில் மரங்கள் விழுந்து விபத்து...!

மதுரையில் திடீரென பெய்த மழை;  மருத்துவமனையில் மரங்கள் விழுந்து விபத்து...!
Published on
Updated on
1 min read

மதுரையில் திடீரென பெய்த கோடை மழையால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்கள் விழுந்து சேதமடைந்தன. அப்போது ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பழமையான மரம் கீழே விழுந்தது, இதில் 2 ஆம்புலன்ஸ்கள் மீது மரம் விழுந்து சேதமடைந்தன.

மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெறித்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய கனமழையானது பெய்தது. இந்த நிலையில் திடீரென அதிவேகத்தில் காற்று வீசியதன் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின்  பிணவறை பகுதியில் உள்ள பழமையான மரம் ஒன்று திடீரென உடைந்து கீழே விழுந்தது. 

இதில் மரத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள் மீது மரம் விழுந்து ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும் மரம் விழுந்து சேதமடைந்த ஆம்புலன்ஸ்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இச்சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருந்த நிலையில் யாருக்கும் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com