TNTET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி நாள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

புதியதாக ஆசிரியர் பணியில் சேர விரும்பும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் இந்தச் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது...
Tamil Nadu Teachers Eligibility Test
Tamil Nadu Teachers Eligibility Test
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காகக் காத்திருக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில், 2026-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் (TNTET) இரண்டாம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 27-ம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, தகுதியுள்ள ஆசிரியர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் தேர்வு தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அதன்படி, 2025 செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்டு, தொடர்ந்து பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் (SGT), பட்டதாரி ஆசிரியர்கள் (BT Assistant), வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) மற்றும் இதற்கு இணையான பணிநிலைகளில் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்புக் கல்வி ஆசிரியர்களும் (IEDSS) உரிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். புதியதாக ஆசிரியர் பணியில் சேர விரும்பும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் இந்தச் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

Paper 1, Paper 2 எதற்கு?

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதிக்காக Paper 1-ம், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதிக்காக Paper 2-ம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தாளிலும் 150 மதிப்பெண்களுக்கு 150 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய கல்விச் சான்றுகள் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணிச் சான்றிதழையும் (Service Certificate) பதிவேற்ற வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: அக்டோபர் 27, 2026

கடைசி நாள்: நவம்பர் 19, 2026

விண்ணப்பத் திருத்தம்: நவம்பர் 20 முதல் 22 வரை

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 20, 2026 (உத்தேசம்)

எனவே, தகுதியுள்ள பணியில் இருக்கும் ஆசிரியர்கள் கடைசி நாளுக்கு முன்பாக விண்ணப்பித்து, தேவையான சான்றிதழ்களைச் சரியாகப் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.