மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தனது அரசியல் பேச்சுக்கு மத்தியில், தான் நடித்த ‘திருமலை’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான “வாழ்க்கை ஒரு வட்டம் டா.. இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்” என்ற வசனத்தை உதாரணமாகக் கூறியது கவனம் பெற்றது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் வேட்பாளரை ஆதரித்து பேசிய முதல்வர் விஜய் “முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை, உங்க வீட்டு பிள்ளையா நான் இங்கு வந்துருகிறேன். ஏன் நான் ஆட்சிக்கு வரக்கூடாத, மகளிர் பேராதரவோட, இளைஞர்கள் பேராதரவோட, மக்கள் நலனுக்கு, போதைப்பொருளை ஒழிக்க, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நம்ம ஆட்சிக்கு வரக்கூடாதா.. நான் சினிமாவில் ஜெயிச்சதுக்கும், அரசியலில் ஜெயிச்சதுக்கும் காரணம் மக்கள் தான்.
அன்று ஜெயலலிதா மேடமா.. ஸ்டாலின் சார் அவதூறா பேசுனா வீடியோ இன்றுவரை வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் மட்டும் இல்லை அவரது வீட்டில் இருப்பவர்கள், அவரது கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் இப்படித்தான் அவதூறா பேசுறாங்க.. இதையெல்லாம் மக்களாகிய நீங்க கவனிச்சிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். இப்படி திமுக பேச அதற்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறது அதிமுக. ஜெயலலிதா மேடமா.. தப்ப பேசுனவங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்ட போது மற்றும் பலரின் முகமுடி கிழிந்துவிட்டது.. அது கூட தெரியாமல் கூவி கொண்டிருக்கிறார்கள்.
யார் எப்படி போனா நமக்கு என்ன.. உங்க சகோதரி நம்ம சகோதரி மரகத குமரவேலுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நீங்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுறது பெண்களை அவதூறா பேசுறவங்களுக்கு நீங்க குடுக்குற தங்கை.. நியாயமா 108 சீட் ஜெயிச்ச நாம் தான் ஆட்சி அமைக்கணும். ஆனா அது நடக்க கூடாதுனு அதிமுகவும், திமுகவும் சேர்ந்து செய்த சதி இருக்கே.. மக்கள் காசை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம்.. தொட்டவரக்ளையும் விடமாட்டோம்.. அதனால்தான் திமுக செய்த ஊழலை சட்டமன்றத்தில் பேசினோம்.
சட்டமன்றத்தில் ஊழல் என்றாலே ஆதாரம் கேட்கிறார்கள் .. ஆதாரம் கொடுத்தால் அது கோர்ட்டில் வழக்கில் உள்ளது என்கிறார்கள்.. அதற்கு கோர்ட் பதில் சொல்லும் என்கிறார்கள்.. ஊழல் செய்த கூட்டத்தை விடமாட்டோம்.. இதுவரைக்கும் நாங்க ஊழலே செய்ததில்லை என உங்களால் சொல்ல முடியுமா? தோற்றாலும் ஜெயித்தாலும் அவர் என் ‘ஸ்வீட் அங்கிள்’.. இத்தனை நாள் நான் மட்டும் தான் கூவிக்கொண்டு இருந்தேன். இப்போது திமுக மேடைக்கு மேடை, ‘ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி; ஒன்று திமுக, மற்றொன்று தவெக’ என்று சொல்கிறார்கள். இப்போ புரியுதா... வாழ்க்கை ஒரு வட்டம்” என்று விஜய் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்