டார்கெட் "EPS".. இடைத்தேர்தலின் கிளைமேக்ஸ் நெருங்கும் நேரத்தில்.. தவெக "பவர் சென்டர்" தரப்பில் இருந்து சென்ற அவசர "மெசேஜ்"

இனிவரும் பிரச்சாரங்களில் இந்த "துரோகம்" என்ற வார்த்தையை நீங்கள் அதிகம் கேட்கும்படி இருக்கலாம் மக்களே.
TVK Bypoll Campaign 2026
TVK Bypoll Campaign 2026
Published on
Updated on
2 min read

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலானது பலராலும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்த இரு தொகுதிகளிலும், 2026 சட்டமன்ற தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

பின்னர், இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பலராலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அந்த தொகுதி மக்களே பெரும் கோவத்திலும், அதிர்ப்தியிலும் இருந்தனர். அதன் பின்னர், இந்த தொகுதியில் "தவெக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள்?" என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

அப்போதுதான் தவெக சார்பில், மக்களின் தீர்ப்பினை புறம்தள்ளி தவெக-வில் இணைந்த அந்த இருவரையுமே அந்த தொகுதியில் தவெக வேட்பாளராக நிற்கவைத்தனர். இதுவும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி, கூட்டணியில் இருந்தவர்களே விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒருபுறம் இருக்க தவெக-வின் பவர் சென்டரில் இருந்து ஒரு அவசர மெசேஜ் பலரது தொலைபேசி நோட்டிஃபிகேஷனையும் தட்டி கொண்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, அவர்களது ஒரே டார்கெட்-டாக இருப்பது "இபிஎஸ் துரோகம் தான் காரணம்" என்பதை மக்களின் மனதில் பதிய வைக்கவேண்டும் என்பதுதான் அது. இன்னும் புரியும்படி விளக்கவேண்டும் என்றால், தவெக-வின் ஆட்சியில் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தொடர் மின்வெட்டு, விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடியை சரிவர செய்யாமை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஆளும் அரசின் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர். இதனை மூடி மறைக்கத்தான் "எடப்பாடி திமுக-வோடு கூட்டணி வைக்க சென்றார்", என்பதை பிரச்சாரத்திற்கு செல்லும் இடம் எல்லாம் கூறச்சொல்லி தவெக 'பவர் சென்டரில்' இருந்து அவசர அலெர்ட்டாக வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதாவது, "எடப்பாடி திமுகவிடம் கூட்டணி வைக்க நினைத்ததால் தான் வேட்பாளர்கள் கட்சி மாறி எங்களிடம் (தவெக) வந்தனர். எடப்பாடி செய்த துரோகம் தான் இந்த கட்சி மாற்றத்துக்கு காரணம். இபிஎஸ் துரோகம் தான் காரணம்.. இபிஎஸ் துரோகம் தான் காரணம்.." என்று மக்கள் மத்தியில் பதிய வைக்க உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் அவர்களுக்கு வாக்கு சதவீதம் எந்த அளவிற்கு வரும் என்பது ஊகிக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும், மக்கள் மத்தியிலும் அரசின் மீது அதிருப்தி என்பது இருப்பதால், தவெக பெற போக்கும் வாக்கு சதவீதம்சொல்லமுடியாத நிலையில் இருப்பதால் அவர்கள் கையில் எடுத்துள்ளதுதான் இந்த "இபிஎஸ் துரோகம் தான் காரணம்" என்ற வார்த்தை.

அதை தவெக கட்சியினர் மிகச்சரியாக எல்லா மேடைகளிலும் செய்து வருகின்றனர். சமீபத்தில், அமைச்சர் அருண் ராஜ் இதுகுறித்து பேசியுள்ளார். அதாவது, இந்த இடைத்தேர்தலில் திமுகவும் - அதிமுகவும் ஒரு புரிதலில் இருப்பதாக குறிப்பிட்டு பேசியுள்ளார். சூழ்ச்சி மூலம் அதிமுகவும் திமுகவும் தேர்தலை வெல்ல முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "எடப்பாடியாரின் வரலாறே துரோக வரலாறுதான்" என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், எடப்பாடி 5000 கோடி செலவு செய்து ஆட்சியை பிடிக்க தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க இனிவரும் பிரச்சாரங்களில் இந்த "துரோகம்" என்ற வார்த்தையை நீங்கள் அதிகம் கேட்கும்படி இருக்கலாம் மக்களே.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும், தவெக-விடமிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது.

"பணம் விளையாடியிருக்கிறது" என்ற வார்த்தை இரண்டு தொகுதிகளிலும் அதிகமாக கேட்கப்பட்ட வார்த்தையாகவே இருந்துள்ளது. தற்போது, தவெக வெற்றிபெறவும், அவர்களது தரப்பில் இருக்கும் சறுக்கல்களை மறைக்கவும் இந்த "இபிஎஸ்-யின் துரோகம்" என்ற வார்த்தைதையைத்தான் தவெக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் இந்த வார்த்தை அவர்களுக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com