

நடந்து முடிந்த சட்டமன்ற 2026 தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. அதிலும் குறிப்பாக திமுக, அதிமுக, தவெக என மும்முனை போட்டியாக அமைந்தது. அதிலும் குறிப்பாக தவெக-விற்கு அதுதான் முதல் தேர்தல் களம். அதிலும் தவெக வெற்றிபெற்று ஆட்சியையும் பிடித்தது. தற்போது, அந்த தேர்தலுக்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான செலவின அறிக்கைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்காக, முக்கிய கட்சிகள் தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அது குறித்து இதில் பார்க்கலாம்.
திமுக:
திமுக கட்சி சார்பில் கிட்டத்தட்ட ரூ.197.85 கோடி செலவு செய்து முதலிடத்தில் இருக்கிறது.
பொதுக் கட்சி பிரச்சாரம்:
கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக நட்சத்திர பேச்சாளர்களுக்காக செய்யப்பட்ட செலவு ரூ. 5,90,93,637
கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தலைவர்களின் பயணங்களுக்காக செய்யப்பட்ட செலவு, ரூ. 8,01,147
கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக செய்யப்பட்ட ஊடக விளம்பரங்க பயன்பாட்டினால் ஏற்பட்ட செலவு ரூ. 70,63,36,125
கட்சியின் பரப்புரையில் போது பயன்படுத்தப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள், கொடிகள் போன்றவை உள்ளிட்ட விளம்பரப் பொருட்களுக்கான செலவு ரூ. 2,03,44,675
கட்சியின் பரப்புரையில் போது ஏற்பட்ட மற்ற செலவுகளாக, ரூ. 71,23,84,575.
வேட்பாளர்களுக்கான செலவு:
கட்சியின் வேட்பாளர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேறு வேட்பாளர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு கட்சியின் சார்பாக செலவு செய்யப்பட்டவை ரூ. 45,75,00,000.
கட்சியின் சார்பில் வெளிடப்பட்ட குற்றப் பின்னணி வெளியீட்டு செலவு ரூ. 2,20,17,632
அதிமுக:
அதிமுக சார்பில், ரூ.112.40 கோடி செலவு செய்யப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதில் அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்களுக்காக செய்யப்பட்ட பயண செலவாக ரூ.17,37,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற தலைவர்களுக்காக செய்யப்பட்ட பயணச் செலவுகளாக, ரூ. 1,75,903 குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் பிரச்சாரத்திற்கான செய்யப்பட்ட ஊடக விளம்பரச் செலவு குறிப்பாக, அச்சு மற்றும் மின்னணு, கேபிள், இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்காக ரூ. 1,03,98,60,490 செலவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பிரச்சார பணிக்காக சுவரொட்டிகள், பதாகைகள், நடைபாதைகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட விளம்பரப் பொருட்களுக்காக ரூ. 4,11,36,582 செலவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி பிரச்சத்தின்போது நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், மேடை, ஒலி அமைப்பு, தடுப்பு, வாகனங்கள் போன்றவற்றின் மீதான செலவாக ரூ. 1,28,57,266 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி-யின் பயண செலவாக ரூ. 4,14,741 குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களின் குற்றவியல் பின்னணிகள் ஏதேனும் இருப்பின், அவற்றை வெளியிடுவதற்காக ஏற்பட்ட மொத்த செலவுகளாக ரூ. 2,78,07,010 குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி:
கட்சிப் பொதுப் பிரச்சாரச் செலவுகளாக மொத்தமாக ரூ. 1,37,55,073 செலவுசெய்துள்ளது.
கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவுகள் ரூ. 4,91,594.
கட்சி பரப்புரையின் போது இதர தலைவர்களின் பயணத்திற்காக செய்யப்பட்ட செலவு ரூ. 15,13,088 (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு செய்யப்பட்ட செலவு)
கட்சிப் பரப்புரைக்காக செய்யப்பட்ட ஊடக விளம்பரச் செலவு ரூ.11,15,041.
கட்சிப் பிரச்சாரத்திற்காகச் செய்யப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், சின்னங்கள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட விளம்பரகங்களுக்கான ரூ. 6,76,511 செலவாகியுள்ளது.
கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பேரணி ஆகியவற்றினால் ஏற்பட்ட செலவு ரூ. 17,56,035 ஆகும்.
கட்சிப் பிரச்சாரத்திற்காக ஏற்பட்ட செலவினங்களாக ரூ. 40,39,174 குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கான செலவு:
கட்சியின் வேட்பாளர்கள் அல்லது பிற வேட்பாளர்களுக்கு, கட்சி சார்பாக செலுத்தப்பட்ட தொகை ரூ. 44,25,224.
அரசியல் கட்சியால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணிகள் இருப்பின் அதுகுறித்து வெளியிடுவதற்காக ஆனா செலவுகள், ரூ.17,00,000 (தின செய்தி செய்தித்தாள்) மற்றும் ரூ.3,50,460 (வேந்தர் தொலைக்காட்சி) மொத்தமாக ரூ. 20,50,460
பாஜக:
பாஜகவின் அறிக்கையின்படி, அதன் தமிழ்நாடு பிரச்சாரத்திற்காக சுமார் ரூ.51.56 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மத்திய தலைமை அலுவலகமானது பொதுப் பிரச்சாரத்திற்காக செய்த செலவுகள்
நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக செய்த பயணச் செலவு ரூ. 9,97,76,077
ஊடக விளம்பரத்திற்காக செய்த செலவு ரூ. 9,64,53,668
விளம்பரப் பொருட்களுக்காக செய்த செலவு ரூ. 24,78,000
பொதுக்கூட்டம், பேரணி போன்றவற்றின் பிரச்சாரத்திற்காக செய்த செலவு ரூ. 11,80,000
மத்திய தலைமை அலுவலகத்தின் பொதுப் பிரச்சாரத்தின் மொத்தம் ரூ. 19,98,87,745
தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் செய்யப்பட்ட பொதுப் பிரச்சாரத்திற்கு செய்யப்பட்ட செலவு
நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு ரூ. 5,74,553
பிற தலைவர்களின் பயணத்திற்காக செய்த செலவு ரூ. 78,249
ஊடகத்தின் வாயிலாக செய்யப்பட்ட விளம்பரச் செலவு ரூ. 14,31,29,559
விளம்பரப் பொருட்களுக்காக செய்த செலவு ரூ. 5,59,75,539
பொதுக்கூட்டம், பேரணி, பிரச்சாரத்திற்கு செய்யப்பட்ட செலவு ரூ. 35,66,500
மாநில பகுதியின் பொதுப் பிரசார மொத்தம் ரூ. 24,52,05,640
வேட்பாளர்களுக்கான செலவு:
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 6,50,00,000
வேட்பாளர்களுக்காக செலவு செய்யப்பட்ட விளம்பரப் பொருட்கள் ரூ.1,67,500
பிற வேட்பாளர் செலவானது ரூ. 20,36,955
குற்றப் பின்னணி வெளியிடுவதற்கான செலவானது ரூ. 33,02,654
வேட்பாளர்களுக்கான செய்யப்பட்ட மொத்த செலவு ரூ. 7,05,07,109
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்