“பெண் போலீசாரிடம் எஸ்.பி செய்த அசிங்கம்” - அலுவலகத்தில் வைத்து செய்த பாலியல் வன்கொடுமை…கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு?

அவமதித்தல், அதிகாரத்தை பயன்படுத்தி வன்கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு. நேற்று கைது செய்தனர்..
“பெண் போலீசாரிடம் எஸ்.பி செய்த அசிங்கம்” - அலுவலகத்தில் வைத்து செய்த பாலியல் வன்கொடுமை…கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு?
Published on
Updated on
1 min read

கோயம்புத்தூர் பகுதியில் தமிழ்நாடு 4 வது பட்டாலியன் படைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு கீழ் பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும், பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசி உள்ளார். எனவே இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் உயரதிகாரிகளிடம் தொடக்கத்தில் புகார் அளித்திருக்கின்றன.

இருப்பினும் தொடர்ந்து செந்தில் குமார் பெண் பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களிடம் அத்துமீறி நடந்து வந்த நிலையில் அவர் மீதான புகார் விரைவாக விசாரிக்கப்பட்டு செந்தில்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் வேறு எந்த வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் இது குறித்து போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் செந்தில் குமார் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், கொடூரமாக தாக்குதல்,பெண்ணின் மரியாதை அவமதித்தல், அதிகாரத்தை பயன்படுத்தி வன்கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு. நேற்று கைது செய்தனர்.

மேலும் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த செய்தியை அறிந்த மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய காவல் துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளதாகவும். ஒரு உயர் அதிகாரியே பெண் போலீசாரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com