" சோதனை எல்லாம் வெறும் வீடியோ நாடகம்...." - பொன் ராதாகிருஷ்ணன்.

" சோதனை எல்லாம் வெறும் வீடியோ நாடகம்...."  -  பொன் ராதாகிருஷ்ணன்.
Published on
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய கனிம வளங்களில் இருந்து பெருமளவு பங்கு ஆளும் கட்சி சேர்ந்தவர்களுக்கு சேர்கிறது எனமுன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் . 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள முன்னாள் மத்திய இணையமைச்சர். பொன் ராதாகிருஷ்ணன் அவரது இல்லத்தில் வைத்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்"

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த விஷயத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு இது போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது,இதற்கு காவல்துறை எஸ்பி உள்ளிட்டோரை முதல்வர் சஸ்பெண்ட் செய்து உள்ளதை பார்க்கின்ற போது இதே காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டத்தில் பணியாற்றி உள்ளனர் என்று தெரிவித்தார்.. 

மேலும், " அங்கு எல்லாம் இந்த கள்ளசாராயம் தலையெடுக்க வில்லை அதை பார்க்கின்ற போது காவல்துறையினர் மீது தவறில்லை அதை கவனிக்க தவறிய காவல்துறையை கையாலுகின்ற முதல்வரின் தவறு என குற்றம் சாட்டினார். 

மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு எளிமாநிலங்களுக்கு அனுப்பப்டுகின்ற கனிம வளங்களில் இருந்து பெருமளவு பங்கு இங்கே உள்ள ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு சேருகிறது என்றும்,  அதேபோன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழக எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது வெளியான வீடியோ அவர் டிராமா நடத்தியது போல் தெரிகிறது எனவும் கூறினார். 

அதோடு, கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் பொய் பேசுவதை விட்டுவிட்டு, களப்பணியில் இறங்க வேண்டும், கனிம வள கடத்தலை தடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த அமைச்சர் இந்த மாவட்டத்துக்கு தேவை இல்லை என குமரி மாவட்ட மக்கள் போராடும் நிலை ஏற்படும் என்றும், அதற்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com