கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ -துவங்கி அது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
மீளுமா தவெக!!
இந்த சூழலில் விஜய் மீண்டும் எப்போது பிரச்சாரத்திற்கு திரும்புவார்? கட்சியின் நிலைப்பாடு இதற்கு மேல் என்னவாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. விஜயின் தற்போதைய அரசியல் வாழ்வியலை கரூர் துயரத்திற்கு முன்பு பின்பு என்று வரையறுக்கலாம்.
இந்நிலையில் கட்சிக்குள் புதுவிதமான சலலசப்பு எழுந்துள்ளதாக, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். “கரூர் சம்பவத்தில் தவெக நடந்து கொண்ட விதம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. ஆனால் முதற்கட்ட தலைவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களோடும் இல்லை, கட்சி தொண்டர்களை வழிநடத்தவும் இல்லை.
தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் மற்றுமொரு பெரிய சிக்கல் அங்கே விஜய் தான் தலைவர் முகம். அவரோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் இரண்டாம் கட்ட முன்றாம் கட்ட தலைவர்களாக அறியப்படுகின்றனர். அது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
புஸ்ஸி ஆனந்த் -க்கு பின்னடைவு!
பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானது மேலும் கட்சிக்கு பின்னடைவை தந்துள்ளது. மேலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ஒரு நபராக ஆனந்த் உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் கூட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆனந்த் கட்சியைவிட்டு நீக்கப்படுவாரா? என்ற கேள்வியும்சில நாட்களுக்கு முன்னரே எழுந்துவிட்டது. இந்த சூழலில் கரூரில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு புஸ்ஸி ஆனந்த் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அதன்பின் கடந்த வாரம்தான் அவர் வெளியே வந்தார். ஆனால் அதற்கு பின்பும் கூட அவர் வீட்டிற்கு உள்ளேயே தான் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் புஸ்ஸி ஆனந்த் வந்த பின்பும் கூட, ஜான் ஆரோக்கியசாமிதான் கட்சி மீட்டிங்குகளை நடத்துகிறார். பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நடத்த வேண்டிய மீட்டிங்குகளை ஜான் ஆரோக்கியசாமி பல மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறார். அமைப்பு ரீதியான கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார். இதனால் அடிமட்டத் தொண்டர்களிடையே அவரது செல்வாக்கு பெருகி வருவதாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமிக்கு நடு சீட் என்று சொல்லும் அளவிற்கு அவர்தான் மையத்தில் இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டார் என சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.