முதியவரை தள்ளி விட்ட பாதுகாப்பு அதிகாரி.. கோபத்தில் விஜய் சொன்ன 'அந்த ஒரு வார்த்தை' - என்ன நடந்தது புதுச்சேரியில்?

விஜய்யும் அவரை கவனித்து பாதிக்கு விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினர், இதற்கிடையில் விஜயின் பாதுகாப்பு
Tvk vijay
Published on
Updated on
2 min read

புதுச்சேரியில்  ஏப்ரல் 9 தேதி நடவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று புதுச்சேரி சென்றார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதனையடுத்து இன்று புதுச்சேரியில் மூன்று இடங்களில் பிரசாரம் நடத்த 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதனையடுத்து தட்டாஞ்சாவடி, கடலூர் சாலை மால் பகுதி மற்றும் தவளக்குப்பம் ஜங்ஷன் சாலை ஆகிய பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார் விஜய். 5 தவெக  வேட்பாளர்களை ஆதரித்து நடந்த இந்த பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் 2 ஆயிரம் பேர் கூடுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் எதிர்பார்ப்புக்கு மேல் மக்கள் குவிந்து பெரும் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது.

பிரசாரத்தை தொடங்கிய விஜய் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிஅமைக்கும் என்றும் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்றும் பரப்புரை நடத்தினர். கூட்டணி காட்சிகளை பற்றி விமர்சித்த விஜய் அடுத்தடுத்த  இடங்களுக்கு பிரசாரத்தை தொடர சுருக்கணுமா துறைகளுடன் முடித்துக் கொண்டார். பின் அவரின் பிரச்சார வாகனத்தை தொடர்ந்த தவெக தொண்டர்கள் பிரச்சாரம் நடக்கும் அடுத்தடுத்த  இடங்களுக்கும் வந்து கூட்டத்தை குறைய விடாமல் அதே அடர்த்தியிலையே வைத்திருந்தனர். அவரின் வாகனத்தை மறித்தும் கூச்சலிடும் பின் தொடர்ந்தார்கள். ஆனாலும் அந்த கூட்டத்தை முடிந்த அளவு தனது கட்டுக்குள் வைத்து பாதுகாப்போடும் காவல் துறையின் உதவியோடும் பிரசாரம் நடந்தது.
பிரசாரத்தை தொடர்ந்தவரே  சாலையில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து சென்ற விஜயை நோக்கியவாறு, ஒரு முதியவர் வணக்கம் வைத்தும் விசில் அடித்தும் வந்தார். தவெக தலைவர் விஜயும் அவரை கவனித்து பாதிக்கு விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினர், இதற்கிடையில் விஜயின் பாதுகாப்பு குழுவில் உள்ள ஒருவர் வாகனத்திற்கு இடையூறாக என நினைத்து வழிவிடுவதற்காக அந்த முதியவரை தள்ளி விட்டுள்ளார். அந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். இதை கவனித்த விஜய் சட்டென அவரை கோபமாக கண்டித்துள்ளார். இது அவருக்குச் சற்றும் பிடிக்கவில்லை, அதனால் கார் முன்னே சென்று கொண்டிருந்தபோது, அவர் அந்தப் பாதுகாப்பு ஊழியரைக் கண்ணடித்தவாறே சென்றுள்ளார். அந்த முதியவரை தள்ளிவிட்டதை கண்டித்த விஜயின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

tvk vijay

தவெக தொண்டர்கள் பலரும் அதை ஷேர் செய்து விஜயின் செயலை பாராட்டி வருகின்றனர். அந்த முதியவரின் மீதான அக்கறையையும் பாதுகாவலர் மீதான உடனடி கண்டிப்பையும் பதிவிட்டு "இது தான் ஒரு தலைவனுக்கான பண்பு" என்றும் குறிப்பிட்டு விஜயை பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com