“தலித் பிரச்சனைகளை திமுக கையாண்ட விதமே தோல்விக்கு காரணம்” - இயக்குனர் பா. ரஞ்சித்! தவெக அரசுக்கு கொடுத்த வார்னிங்?

ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மர்டர் குறித்து அவர்கள் கையாண்ட விதமும் தான்
pa ranjith
பா. ரஞ்சித்
Published on
Updated on
1 min read

2024-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டர். அதற்கான விசாரணை இன்றளவு நடந்து கொண்டிருக்கிறது. அதையடுத்து அந்த அக்கட்சி இரு பிரிவுகளாக பிரிந்து, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். சென்னை RK நகர் தொகுதியில் NDA கூட்டணியில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைத்தார்.

நேற்று ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடந்தது. அதில் தமிழக அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். 

இயக்குனர் பா. ரஞ்சித் பேசியதாவது, “கடந்த ஆட்சியில் தான் அண்ணனுடைய மரணம் நிகழ்ந்தது, அதை திமுக கையாண்ட விதத்தை குறித்து விமர்சனம் வைத்திருந்தோம். அந்த விமர்சனத்தின் அடிப்படையில் மிக மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த வழக்கை அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதும் தெரியும். இன்று வரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை” என்றும் குறிப்பிட்டார். மேலும் “திமுகவுடைய ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் விவாதிக்கப்பட்டது, ஆனால் அதில் முக்கியமான காரணமா நான் பார்ப்பது, தலித்துகளுடைய பிரச்சனைகளை எப்படி கையாண்டது என்பது தான்” என்றும் “ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மர்டர் குறித்து அவர்கள் கையாண்ட விதமும் தான், இது தான் சென்னையில் மிகப்பெரிய ஒரு அலையை உருவாக்கியது. தொடர்ந்து பேசிய இயக்குனர் ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தொடர் தடை விதித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் “தற்போதைய தவெக அரசுக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்றும் “இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆட்சி மாற்றம் நடந்தாலும் இங்கு தலித்துகளுக்கு எதிராக பிரச்சனைகள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஆணவ கொலைகள் குறித்து எந்த கருத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"8 பட்டியலின அமைச்சர்களை நியமித்தது இந்த அரசு, ஆனால் தலித் பிரச்சனைகளில் அமைச்சர் வன்னி அரசு தவிர்த்து மற்ற அமைச்சர்கள்களின் குரல் என்ன? அது வெறும் வெற்றிடமாக தான் இருக்கிறது. தற்போது உள்ள அரசியலில், ஜாதி ஒழிப்பு பற்றி பேசுவது வாக்கு வங்கியை பாதிக்கும் என அரசியல் கட்சிகள் தவிர்ப்பதாக குற்றம் சாட்டினார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com