தூய்மை பணியாளர் கைது: 'கூலி' படம் பார்க்க டைம் இருக்கு எங்கள பார்க்க முடியாதா முதல்வரே? வலுக்கும் எதிர்ப்புகள்!!

13 நாட்களாக மாநகராட்சி கட்டிடம் முன்பு போராடிய 1000 -க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை பார்க்க உங்களுக்கு ...
sanitation worker protest
sanitation worker protest
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் கட்டிடம் முன்பு அமைதியான முறையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று அவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  இந்நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்துவதற்காக நேற்று இரவு ஆயிரக்கணக்கான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு  தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்து பேருந்துகளில் ஏற்றும்போது இளைஞர்கள் பெண்களை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று உலகம் முழுக்க ‘கூலி’ திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு முதல்வர் மு.கஸ்டலின் பாராட்டியிருந்தார். துணை முதல்வரும் “Mass Entertainer” என புகழ்ந்திருந்தார்.

ஆனால் 13 நாட்களாக மாநகராட்சி கட்டிடம் முன்பு போராடிய 1000 -க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை பார்க்க உங்களுக்கு நேரம் இல்லையா? என போராட்டக்காரர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கூலி’ படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com