“மணல் அள்ளவும், போஸ்டிங் வாங்கவும் கட்சி மாறிவிட்டார்கள்” - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு!

இன்றைக்கு அமைந்துள்ள ஆட்சி நீடிக்காது, நிலைக்காது, இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி..
 Rajendra Balaji
Published on
Updated on
1 min read

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக வருபவர்களுக்கு வாக்களிப்பார்கள். அவ்வாறுதான் வைகோ, விஜயகாந்த், சீமான் வரும்போது வாக்களித்தார்கள். அப்படித்தான் விஜய் புதிதாக வந்ததால் அந்த வாக்குகள் அவருக்கு சென்றது. விஜய் நடிகராக இருந்ததால் எளிதாக மக்களிடத்தில் சென்றடைந்தார்” என்று தெரிவித்தார். மேலும் தவெக- வின் வாக்குறுதிகள் குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, செய்யவே முடியாத, நடத்தவே முடியாத திட்டங்களை விஜய் வாக்குறுதியாக கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விஜய் பெற்றுள்ள வெற்றி நிச்சயமாக நிரந்தரமானது அல்ல, இந்த வெற்றி என்பது கானல் நீர் போல, விஜயை நம்பி சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அனுமதி கேட்கும்  காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 MLA-கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைத்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் M. R விஜயபாஸ்கர் அடங்குவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “இன்றைக்கு அமைந்துள்ள ஆட்சி நீடிக்காது, நிலைக்காது, இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி, பல்வேறு கூட்டுக் கட்சிகளின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள காட்சிகளை கூட்டு சேர்த்து தவெக ஆட்சி அமைந்துள்ளது, ஆகவே எந்த நேரத்தில் எப்படி நடக்கும் என சொல்ல முடியாது. முதல்வர் விஜய் பேசியதை அதிமுக தூர்ந்து போன கட்சி என முதல்வர் விஜய் பேசுகிறார், இதுபோன்ற அரசியல் விமர்சனத்தை எல்லாம் கடந்து பழக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதை வரும் காலங்களில் நிரூபிப்போம் என தெரிவித்தார். 

தவெக-விற்கு வாக்களித்தவர்கள் வேட்பாளர் யாரையும் பார்க்காமல், எதையும் பார்க்காமல் ஒன்னுமே தெரியாமல் செலுத்தியுள்ள வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகளாகவே பார்க்க வேண்டும். ஆனால் வாக்களித்த மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏக்களை பார்த்து மக்கள் யாரும் பேசுவதுமில்லை, மரியாதை கொடுப்பதும் இல்லை, ஏனென்றால் அது ஒரு கானல் நீர். அதிமுகவில் இருந்து தவெக விற்கு சென்ற முக்கிய நிர்வாகிகள் குறித்து, “அங்கே சென்று மணல் அள்ளி விடலாமா, கல்லை அள்ளி விடலாமா, போஸ்டிங் போட்டு விடலாமா என  லாப நோக்கத்தோடு சென்றுள்ளவர்களைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்” என்றும் அங்கு ஒன்று நடக்காது இந்த ஆட்சி நிலைக்காது என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com