"விஜய் வந்தா போதும்னு நினைக்குறாங்க..” எடப்பாடி போடும் புதுக்கணக்கு..! ஜெயிச்சா இவருதான் சி.எம்!?

போதாமை தான் ஏக்கத்திற்கு காரணம், எடப்பாடிக்கும் நன்றாக தெரியும் பாஜக -வை வைத்துக்கொண்டு திமுக -வை ....
edapadi palanisamy vs vijay
edapadi palanisamy vs vijay
Published on
Updated on
2 min read

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

ஆனால் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்  இந்த வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டுள்ளது. இது திமுக -விற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் களம் புதுப்புது பரிணாமங்களை கடந்து வருகிறது.

இந்த அமளிகள் நடந்துகொண்டிருக்கும்போதுதான் ‘எடப்பாடி -யின் பிரச்சார கூட்டத்தில் பறந்துகொண்டிருந்த தவெக கொடியை பார்த்து, ‘பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க… யாரும் எதிர்பார்க்காத கூட்டணி அமையும்’ என பேசியிருந்தது, விஜய் -ன் தேவை இன்னும் அதிமுக -விற்கு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆனால் விஜய் அவர்களின் அழைப்புக்கு இதுவரை எந்த பதிலும் பேசாமல் தான் இருந்து வருகிறார். ஆனால் கூட்டணி குறித்து பொங்கல் முடிந்த பின்னரே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.  ஒரு வேளை அதிமுக உடன் விஜய் இணைகிறார் என்றால், அது தவெக தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “போதாமை தான் ஏக்கத்திற்கு காரணம், எடப்பாடிக்கும்  நன்றாக தெரியும் பாஜக -வை வைத்துக்கொண்டு திமுக -வை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல… ஆகவே தான் அவர்கள் ரொம்ப நாட்களாக விஜய் வரவேண்டும், விஜய் வரவேண்டும், விஜய் வந்தா பொதும்.. என்ற கோரிக்கையை தொடர்ந்து  முன்வைத்து வருகின்றனர். ஒருவேளை விஜய் இதற்கு சம்மதித்தாலும் தான் தான் முதல்வர் வேட்பாளர் என்ற கருத்திலிருந்து நிச்சயம் மாறுபட மாட்டார், அவ்வப்போது எடப்பாடியும் இதற்கு ஒப்புக்கொள்வார் என்ற பேச்சுகளும் அடிபடுகிறது. ஆனால் என்னை கேட்டீர்கள் என்றால் இபிஎஸ் இன்னும் அந்த மனநிலைக்கு வரவில்லை. அவரிடம்தான் இரட்டை இலை  இருக்கிறது. கட்சியை தனக்கேற்றார் போல  இப்போதுதான் மாற்றியுள்ளார், எனவே இப்படி ஒன்று நடக்க சாத்தியம்  குறைவு என்றாலும்… இல்லை என்று சொல்லிட முடியாது” என அவர் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com