"ஸ்டாலின் தோல்வியை முன்பே கணித்தேன்" - தொகுதி மாறச் சொன்ன திருமா.. எச்சரிக்கையை கண்டுகொள்ளாத சேகர்பாபு?

"தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்தது. நானும் அவருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றேன்.."
SIR protest
Published on: 
Updated on: 
1 min read

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையான SIR தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், ஞானேஷ்குமார் பதவி விலக கோரியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் முஸ்லீம் லீக் காட்சிகள் கலந்துகொண்டு ஞானேஷ்குமார் பதவி விலககோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்விக்கு SIR திருத்ததும் தான் காரணம் என்று குறிப்பிட்டார். அவர் பேசியதாவது, SIR விவகாரத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் யாருக்காக இதை செய்கிறார். இந்த கேள்விதான் இன்றைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எழுப்புகிற கேள்வி. இன்றைக்கு புதிதாக உருவாகி இருக்கும் சிஜேபி என்கிற அமைப்பும் இதற்கு தான்  போராடுகிறது.

தமிழ்நாட்டிலே நம்முடைய திராவிட முன்னேற்ற கழக தலைவர் முன்னாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட இருக்கிறார். கேரளாவிலே பினராய் விஜயன் அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவு வந்தபோதே என்னிடத்தில் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது நான் சொன்னேன் இவற்றை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் தன்னியல்பாக தோற்றவர்கள் என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் சதியால் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்ற கருத்தை நான் பதிவு செய்திருக்கிறேன்.

ஆகவே SIR யை அவர்களின் கொள்கை எதிரிகளை அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு அம்பலமாகி இருக்கிறது. இதை அம்பளப்படுத்தியவர்கள் காங்கிரஸாகளோ.. இடதுசாரிகளோ அல்ல. அம்பலப்படுத்தி இருப்பவர்கள் உடன் பணியாற்றக்கூடிய இரண்டு தேர்தல் ஆணையர்கள். நம்முடைய முன்னாள் முதலமைச்சர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்தது. நானும் அவருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றேன், மாண்புமிகு மேனாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் இதை எடுத்துச் சொன்னேன். ஒரு யாரோ ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் முதலமைச்சர் வெற்றி பெறுவது கடினம் என கூறினார். 

முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போதும் நான் அவரிடம் சொன்னேன்.. உங்களை தோற்கடிப்பதற்கு சதி நடக்கிறது என்று கூறினேன். . நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது என்று ஸ்டாலினிடம் நான் கூறினேன். “ஆனால் பணிகள் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது வேறு தொகுதிக்கு மாற வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பொழுது அவர் கூறினார்” என்று குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com