“விஜயை சங்கி என விமர்சித்த திருமாவளவன்..” “காமாலை நோயாளிக்கு காண்பதெல்லாம்..” -தமிழிசை ஆவேசம்!!

தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் அரசு மருத்துவமனையில் ...
thamizhisai vs thirumavalavan
thamizhisai vs thirumavalavan
Published on
Updated on
2 min read

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

தற்போதுதான் தமிழக வெற்றிக்கழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு மக்கள் சந்திப்பில், விஜய் திமுக -வை மிக காத்திரமாக விமர்சித்திருந்தார். மேலும், கொள்கை எதிரியான பாஜக எதுவும் சொல்லாமல் இருந்ததும் கூட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.  இந்த சூழலில்தான் விஜய் “ஆர்.எஸ்.எஸ் -ன் குரலில் ஒலிக்கிறார், சங்கித்தனமாக பேசுகிறார்” என திமுக கூட்டணியில் உள்ள எம்.பி திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதற்குத்தான் தமிழக பாஜக -வின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் திருமாவளவனை கடுமையாகி தாக்கியிருந்தார், 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவமனைக்கு பதில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.  விஜய் தனியாக வர வேண்டுமா அல்லது அணியாக வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.  இன்று திமுகவின் மாநாடு நடைபெறும் இடத்திலும் தாமரை ஏற்கனவே மலர்ந்து விட்டது.

கோயம்புத்தூரில் பாஜக சார்பாக சுய சார்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது சுயசார்பு தொழில் முனைவோர் மூலமாக பெண்கள் எந்த அளவு முன்னேறி இருக்கிறார்கள் சுய சார்பு தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் பெண்கள் லட்சாதிபதி ஆகி அவர்கள் பல பெண்களுக்கு வேலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை அவர்கள் தான் சந்திக்க செல்கிறோம்  இதுதான் மகளிர் மாநாடு. 

காமாலை நோயாளிக்கு எல்லாம் மஞ்சளாக தெரிவது போல் திருமாவளவனுக்கு   அனைவரும் சங்கியாக தெரிகிறார்கள் விஜய் சங்கி சீமான் சங்கி எனக் கூறுவதோடு அதிமுகவை அடிமை என கூறி வருகிறார் நாங்களும்  சுதந்திரமாக தான் செயல்படுகிறோம் அதிமுகவும் சுதந்திரமாகத் தான் செயல்படுகிறது ஆனால் திருமாவளவன் நிரந்தர அடிமையாக இருக்கிறார். வேங்கை வயல் பகுதியில் மலம் கலந்த தண்ணீரை குடித்ததற்கு கூட எதுவும் கூறாமல் அடிமை போல் இருக்கிறார் எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்... 

 தமிழகம் அதிக கடனில் இருக்கிறது என்பது குறித்து, தமிழக மக்கள் நபர் ஒருவர் மீது ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது. வட்டி மட்டும் ரூ.65 ஆயிரம் கோடி கட்டிக்கொண்டிருக்கிறோம். ஒன்பதாயிரம் ரூபாய் நபர் ஒன்றுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஐந்து லட்சம் ரூபாய் ஒரு குடும்பத்தின் மீது கடனை ஏற்றி வைத்திருக்கிறார். இதுதான் தமிழக அரசின் சாதனை இது காங்கிரஸ்காரர்களுக்கு கூட பொறுக்கவில்லை. 

எங்களது குறிக்கோள் அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் அரசு மருத்துவமனையில் கிடைக்க வேண்டும். பாண்டிச்சேரியில் அரசு மருத்துவமனையில் தான் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். ஆனால் தமிழக முதலமைச்சர் தனியார் மருத்துவமனையில் சென்று போட்டுக் கொண்டார். அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் செவிலியர்களை ஆபரேஷன் செய்ய வைப்பது உயிரோடு விளையாடக் கூடாது இதை தரம் உயர்த்த வேண்டும் மருத்துவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். 

உத்திரப்பிரதேசத்தில் 86 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன விமான நிலையங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் இவர்கள் நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என செல்வ பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். இதற்கு முன்பு தமிழக அரசு நடைபெறாமல் இருந்ததா திராவிட மாடலுக்கு மட்டும் தான் புதிது புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வருகிறதா விஜய் தனியாக வருவது சரியா அணியாக வருவது சரியா என சிந்திக்க வேண்டும் தமிழக மக்களின் நலனுக்காக அதை சிந்திக்க வேண்டும் 

தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேட்ட பொழுது எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை பத்திரிகையாளர்களிடம் பேசுவது தான் நாங்கள் ஒன்றாக சேர வேண்டும் என கூறினால் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை நாங்கள் பலமாக தான் இருக்கிறோம்.

கருத்து கூறியவுடன், அவர்களை நாங்கள் அழைக்கிறோம் என்று இல்லை அணியாக செயல்பட வேண்டுமா? தனியாக செயல்பட வேண்டுமா? என சிந்திக்க வேண்டும்.  ஏற்கனவே கோயம்புத்தூரில் தாமரை மலர்ந்துள்ளது. கோயம்புத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தான் இன்று துணை குடியரசுத் தலைவராக இருக்கிறார்.  ஏற்கனவே திருமாவளவன் எங்களுடன் கூட்டணி வைத்தார் வாஜ்பாய் காலத்தில் கூட்டணி வைத்து தான் அவர்கள் அமைச்சரானார்கள்.  இதுபோன்று ஏற்கனவே பலமுறை தாமரை மலர்ந்து விட்டது. அதைப் பார்த்து இவர்கள் அரண்டு கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு வருத்தம் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com