“இது ஷூட்டிங் ஸ்பாட் இல்லை” - தவெகவை மறைமுகமாக சாடுகிறாரா சிம்ரன்? கொந்தளிக்கும் TVK விர்சுவல் வாரியர்ஸ்!

வாக்குச்சாவடிகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும், வாக்களிக்கும் செயல்முறையில் கவனம் செலுத்துமாறும்
simran about TVK
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் காலை 7 மணி தொடங்கி 6 மணிவரை மிகவும் பரபரப்பாகநடந்து முடிந்தது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு  தேர்தல் களமும், செலுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

பல அரசியல் கட்சியினரும் மற்றும் சினிமா பிரபலங்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும் அவர்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். முதல் ஆளாக சென்று வாக்களித்த நடிகர் அஜித்குமார் தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷால் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதில் நடிகர் விஷால், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆதரித்து பேசியது, விஜய்யை ஆதரிக்கிறாரா எனும் கேள்வியை எழுப்பியது. பிறகு நடிகை திரிஷா வாக்கு செலுத்தியதை குறித்து பதிவிட்டு, அதற்கு விஜய் மற்றும் திரிஷா சேர்ந்து நடித்த கில்லி படத்தின் பாடலை இணைத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

மேலும் சிலர் மாற்றம் வேண்டும் என்னும் கோர்ட் வேர்ட் உடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து நடிகை சிம்ரன் வாக்கு செலுத்தியது குறித்து சமீபத்திய சமூக ஊடகப் பதிவிட்ட பதிவு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிப்பது ஒரு பொறுப்பு என்றும், இது வாக்குச்சாவடி, 'சினிமா படப்பிடிப்பு' அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வாக்குச்சாவடிகளில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும், வாக்களிக்கும் செயல்முறையில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிம்ரனின் கருத்துக்கள், நடிகர் விஜய்யின் TVK  கட்சியையும் அவரின் தொண்டர்களையும் விமர்சித்து மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றவர்களோ, அவர் பொதுவாகத் தேர்தல்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் ஊடகக் கவனம் ஆகியவற்றை குறிப்பிட்டே இவ்வாறு கூறியதாக வாதிடுகின்றனர்.

சிம்ரனின் இந்த பதிவு தவெக-வினரை விமர்சிக்கப்பதாக இருப்பதற்கு சாத்தியம் அதிகம் என்றே தெரிகிறது. காரணம்  தவெகவை சேர்ந்த சிலர் செல்போன் உடன் வாக்கு சாவடிக்கு வருவது, அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டு fire விடுவது போன்ற தேர்தல் விதிமுறைகளை மீறி சில சிக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்களிக்க செல்வோரிடம் கட்சியின் பெயரையும் விஜயின் பெயரையும் கத்தி கத்தி கூச்சலிட்டு விதிமுறைகளை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனாலே இந்த பதிவாக இருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com