விஜய்க்கு ஓட்டு போட்டதை சூசகமாக அறிவித்த த்ரிஷா.. இதுக்கு மேல வெளிப்படையா சொல்ல முடியாது!

மெகா ஹிட்டான 'கில்லி' படத்தின் அதிரடியான "அர்ஜுனரு வில்லு" பாடலை அவர் அந்தப் பதிவில் இணைத்திருந்தார்...
trisha insta post
trisha insta post
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று களைகட்டி வரும் வேளையில் நடிகை த்ரிஷா இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை ரகசியமாகப் பதிவு செய்தார். ஆனால், ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்த த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவுதான் இப்போது ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தையும் "ஷாக்" ஆக்கியுள்ளது.

த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மை வைக்கப்பட்ட தனது விரலைக் காட்டி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்குப் பின்னணியில் அவர் சேர்த்திருந்த இசைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து மெகா ஹிட்டான 'கில்லி' படத்தின் அதிரடியான "அர்ஜுனரு வில்லு" பாடலை அவர் அந்தப் பதிவில் இணைத்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், "த்ரிஷா யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பதை இதைவிட வேறு எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்?" என்று கமெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக, இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' (TVK) கட்சி சார்பில் முதல்முறையாகக் களம் கண்டுள்ளார். விஜய்யின் நெருங்கிய தோழி மற்றும் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற முறையில், த்ரிஷா தனது ஆதரவை விஜய்க்குத்தான் வழங்கியுள்ளார் என்பதை இந்த ஒரு பாடல் மூலம் சூசகமாக அறிவித்துவிட்டதாக நெட்டிசன்கள் அடித்துக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கோரிய நிலையில், த்ரிஷா தான் அதற்கு காரணம் என்று பல விமர்சனங்கள் உள்ள நிலையில், த்ரிஷா தனது ஆதரவை விஜய்க்கு அளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com