எல்லார் வீட்டுலையும் ‘இது’ இருக்கனும்..! அடடே விஜய் -ன் தேர்தல் வாக்குறுதி இதுதானா!?

அதைவிட ரொம்ப மிக முக்கியமான விஷயம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருக்க....
Vijay
Vijay
Published on
Updated on
2 min read

2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. 

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும்,  இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள்  உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை. 

இந்த சூழலில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விஜய் பெரிதளவில் வெளியே வராமலே இருந்தார். சமீபத்தில் நிர்வாகிகளுடன் சிறப்பு பொதுக் குழுவையும் கூட்டியிருந்தார்.  ஆனால் மக்களை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் தன நேற்று ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்திற்காக 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் “மக்கள் பாதுகாப்பு படை” இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பை வழங்கி இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளாக சில திட்டங்கள் இடம் பெறும் என்பதை சூசகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய்," எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காரும் தான் லட்சியம். அதற்கான வசதிக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ரொம்ப மிக முக்கியமான விஷயம் சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு பவர்ஃபுல்லான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். அண்ணா யூனிவர்சிட்டியில் அந்தப் பெண்ணுக்கு நடந்த பிரச்சனை மாதிரியோ கோவையில் கல்லூரி பெண்ணுக்கு நடந்த பிரச்சனை மாதிரியோ இனி யாருக்கும் நடக்கவே விடக்கூடாது. நமது வீட்டுப் பெண்கள் பயமே இல்லாமல் இருக்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்த போகிறோம் என்று நமது தேர்தல் அறிக்கையில் விரிவாக கொடுப்போம்" என பேசியிருந்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் திமுக -வை கடுமையாக விமர்சித்த விஜய் அதிமுக - பாஜக பக்கம் போகவில்லை. மேலும், மதுரை - கோயமுத்தூர் மெட்ரோ திட்டப்பணிகளை ஒன்றிய அரசு மறுத்திருந்தது, ஆனால் அதுபற்றி விஜய் பேசவில்லை. “தமிழ்நாடு மக்கள் சார்ந்த பிரச்சனைக்கு என்ன கருத்து கூறியிருக்கிறார், என திமுக செய்தித்தொடர்ப்பிலார் டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார். 

ஆனால் விஜய் -ன் இந்த பேச்சு, தேர்தல் அறிக்கைக்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம் என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். காரணம் “எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என பேசியிருப்பதன் மூலம் வீட்டுக்கு வீடு இருசக்கர வாகனம் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com