“பெண்களை தவெக நிர்வாகியிடமிருந்து பாதுகாக்க ... இன்னொரு சிங்கப்பெண் படை வேண்டுமா?” - டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து...
TTV தினகரன்
Published on
Updated on
2 min read

இன்று கடலூர் மற்றும் கரூர் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ராமநாதபுரத்தில் தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சிங்கப்பெண் அதிரடிப்படையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் அராஜக செயலில் ஈடுபட்டு தொந்தரவு செய்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அமமுக பொது செயலாளர் TTV தினகரன், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

TTV தினகரன் தனது X தள பதிவில் இதுகுறித்து, ‘கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி” என்ற செய்தியை குறிப்பிட்டு “பெண்களை தவெகவினரிடம் இருந்து  பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா? எனும் கேள்வியை முன் வைத்துள்ளார். மேலும் “கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி  ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்கு மேடை வீர வசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார்? என்றும் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு கேள்விகளை அடுக்கியுள்ளார். 

“தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை  கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது” என்றும் கட்டமாக விமர்ச்சித்துள்ளார். எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக  இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்றும் கேட்டு கொண்டார்.

மேலும் பல அரசியல் தலைவர்களும் தங்களுது எதிர்ப்புகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர். குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுய ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்” என்றும் திமுக MP கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com