திருச்சி மேற்கு.. நேருவின் அசைக்க முடியாத கோட்டை! "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

கே.என். நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கு, திமுகவின் எஃகு கோட்டையாக...
Trichy West constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் கே.என். நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கு, திமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படுகிறது. அமைச்சரின் அதீத களப்பணி மற்றும் மக்கள் தொடர்பு இந்தத் தொகுதியைத் திமுகவின் பாதுகாப்பான இடமாக மாற்றியுள்ளது. இருப்பினும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் தபால் வாக்குகளும், இளைஞர்களின் முடிவும் இந்த முறை கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

திருச்சி மேற்கு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.8 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 28.1 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முக்குலத்தோர் 25 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 15 சதவீதமும், முஸ்லிம்கள் 15 சதவீதமும், சோழிய வெள்ளாளர்கள் 10 சதவீதமும் உள்ளனர். 100 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாக்குகள் மிக முக்கியமானவை.

Trichy West constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நிலவும் வாகன நிறுத்தப் பிரச்சினை மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலிடத்தில் உள்ளது. திருவாணைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது மற்றும் வடிகால் வசதி முறையாக இல்லாதது மக்களின் அதிருப்திக்குக் காரணமாக உள்ளது. அரியமங்கலம் பழைய சந்தையை நவீனமயமாக்க வேண்டும் என்பதும், சுற்றுலாத் தலமான கல்லணைப் பகுதியில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதும் திருச்சி மேற்கு மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

திருச்சி மேற்கு தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 65.2 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது. 2024-ல் இது 57.1 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், 2024-ல் 27.7 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 138 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 123 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 89 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 82 பூத்களாக நீடிக்கிறது. சுமார் 33 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, திருச்சி மேற்கில் திமுக 120 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 80 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 70 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 38 சதவீத வாக்குகளைப் பெற்று மிகவும் வலுவாக உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 8 சதவீதமாக இருக்கும் என்பதால், அமைச்சர் கே.என். நேருவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com