“மோசடியில் ஈடுபட்டதா தவெக?” - நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் ஏற்பட்ட பரபரப்பு.. டிடிவி தினகரன் வைத்த குற்றச்சாட்டு!

போலியான கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருந்தார்..
“மோசடியில் ஈடுபட்டதா தவெக?” - நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் ஏற்பட்ட பரபரப்பு.. டிடிவி தினகரன் வைத்த குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க 118 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது. தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய இடது சாரி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக உறுதி செய்தனர்.

மேலும் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் விஜய்க்கு ஆதரவு அளிக்க போவதில்லை எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று தங்களது முடிவை குறை உள்ள நிலையில், பெரும்பாலும் அவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ் காணவில்லை எனவும், அவர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக கவர்னரிடம் அக்கட்சியினர் போலியான கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்திலேயே அமமுக வேட்பாளர் காமராஜ் மற்றும் டிடிவி தினகரன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு அதிமுகவிற்கு தான் என கடிதம் வழங்கினார். மேலும் தவெக தரப்பில் காமராஜ் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக வழங்கப்பட்ட கடிதம் போலியானது எனவும் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் “உங்களுக்கு 108 எம்.எல் ஏக்கள் உள்ளனர். தூய சக்தி நீங்கள், தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.. ஆனால் இராவணன் சீதையை தூக்கியது போல ஒரே ஒரு கடித நகலை கொடுத்து எங்கள் எம்.எல் ஏவை துக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? திமுகவின் கோட்டையாக இருந்த மன்னார்குடியில் உழைத்து, போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனை மோசடி செய்து பறிக்க பார்க்கிறார்கள். தவெக தயாரிப்பில் போலி கடிதம் கொடுக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகாரளிக்க இருப்பதாகவும். தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறதா என கவர்னர் சந்தேகிக்கிறார்” என தெரிவித்துள்ளார். மேலும் மன்னார்குடி எம்.எல். ஏ காமராஜும் தனக்கும் அந்த கடிதத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com