“சென்னையில் முன்னிலை வகிக்கும் தவெக” - கொளத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்த முதலமைச்சர்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?

TVK வேட்பாளர் வெங்கட்ராமன் சுமார் 32,500 வாக்குகளுடன் முன்னிலை...
vijay and stalin
vijay and stalin
Published on
Updated on
2 min read

சென்னையில் அரசியல் வரலாறு பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டம் அந்த நிலைமையை மெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நகரின் ஐந்து முக்கிய தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் (TVK) கணிசமான எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பது, இது ஒரு சாதாரண தேர்தல் நிகழ்வு அல்ல என்பதைக் காட்டுகிறது.

நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, முதல் முறையாகவே நகர்ப்புற வாக்காளர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் மத்தியில் உருவான மாற்ற மனநிலை, பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சிதைவை ஏற்படுத்தியுள்ளது என்பது ஆரம்ப கட்ட எண்ணிக்கைகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.

பெரம்பூர் தொகுதியில், TVK வேட்பாளரும் அந்த கட்சியின் தலைவருமான விஜய் சுமார் 18,668 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சுமார் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு காணப்படும் குறுகிய வாக்கு வித்தியாசம், நகர்ப்புறநடுத்தர மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

மயிலாப்பூர் தொகுதியில் நிலைமை இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. பாரம்பரியமாக குறிப்பிட்ட சமூகங்களின் வாக்கு ஆதரவை நம்பியிருந்த கட்சிகள் இந்த முறை வாக்கு பிளவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் TVK வேட்பாளர் வெங்கட்ராமன் சுமார் 3020 வாக்குகளுடன் முன்னிலை வகிப்பதாகத் தெரிய வருகிறது.

அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் திமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் கொளத்தூர் தொகுதியில் திமுகவின் வாக்கு சரிவு கணிசமாகப் பதிவாகியுள்ளது. இங்கு TVK வி. எஸ் பாபு வேட்பாளர் சுமார் 4,487 ஆயிரம் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இது வெறும் போட்டி அல்ல, ஒரு அரசியல் மாற்றத்தின் அறிகுறி என அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

வேளச்சேரி தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்காளர்கள் மத்தியில் TVK-க்கு கிடைத்த ஆதரவு காரணமாக, அந்தக் கட்சி வேட்பாளர் குமார் சுமார் 3698 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். இது “இஷ்யூ அடிப்படையிலான வாக்குப்பதிவு” நகரங்களில் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

தியாகராய நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், அந்த தொகுதியில் பாரம்பரிய திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிகள் சிதைந்த சுமார்13,466 ஆயிரம் வாக்குகளுடன் TVK முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் floating voters-ன் தாக்கம் இந்த முறை அதிகமாக இருந்ததே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இவ்வாறு சென்னையின் ஐந்து தொகுதிகளில் உருவாகியுள்ள இந்த புதிய அரசியல் நிலைமை, வெற்றி-தோல்வியைத் தாண்டி பார்க்க வேண்டிய ஒன்றாகும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய அரசியல் துருவங்களுக்கிடையே நிலவி வந்த ஆதிக்கத்தில் ஒரு மாற்றம் தொடங்கியுள்ளதாக இது சுட்டிக்காட்டுகிறது.

இது உடனடியாக ஆட்சியமைப்பை மாற்றும் அளவுக்கு செல்லுமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்தாலும், வாக்கு சதவீத அளவில் ஏற்பட்ட இந்த உயர்வு, எதிர்கால அரசியலில் தமிழக வெற்றி கழகம் ஒரு முக்கிய சக்தியாக மாறும் சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது.சென்னை நகரம் அளித்த இந்த சிக்னல், தமிழ்நாடு முழுவதும் அரசியல் சமநிலையை மாற்றக்கூடிய ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்பதே தற்போது அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்தாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com