தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் தவெகவினர்! முதல்வர் பேச்சையே கண்டுகொள்ளாத MLA.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

இந்த வீடியோ காட்சிகள் மற்றும் ரீஸ்ஸ் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன
தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் தவெகவினர்! முதல்வர் பேச்சையே கண்டுகொள்ளாத MLA.. நடவடிக்கை எடுக்குமா அரசு?
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு அங்கன்வாடி மையம் மற்றும் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான நியாய விலைக் கடையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நடத்தியதாக கூறப்படும் நிகழ்வுகளின் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை அவரே எடுத்து வந்து மாட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் மற்றும் ரீஸ்ஸ் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு துறைக்கு சொந்தமான நியாய விலைக் கடையில், அருப்புக்கோட்டை தவெக நகரச் செயலாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்விலும் முதலமைச்சரின் புகைப்படம் கொண்டுவந்து மாட்டப்பட்டு, ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து, குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இது போப்பிடற தொடர் விதிமீறல் செயல்களால் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நலத்திட்ட மையங்களில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதா? அரசு இடங்கள் அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் அனுமதி இன்றி அரசியல் கட்சியினர் பள்ளி அவலத்திற்கு சென்றாலோ அல்லது ஆய்வுகள் மேற்கொண்டாலோ அவர்களின் மீது நடைபவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றி கழகத்தினை சேந்தவர்கள் சென்று இது போன்ற வீதி மீறல் செயல்களில் ஈடுபட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் N ஆனந்த் தெரிவித்திருந்தார். 

ஆனால் கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்களை மீறி, அரசு வளாகங்களில் இதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து வெளியிடும் நிர்வாகிகளின் செயல்பாடு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையற்ற சர்ச்சையையும் அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com