"ஒரு விரல் புரட்சி படத்தில், உருட்டுக்கட்டை புரட்சி ஆட்சியில்.." - பரந்தாமன் குற்றச்சாட்டுகளுக்கு ராஜ்மோகன் பதில் என்ன?

"தலைவனுக்கு ரசிகனாய் இருந்து டிக்கெட் வித்தவன் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் இப்படித்தான் இருக்கும். பெண் IAS ஆபீசர், கலெக்டரிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?" - பரந்தாமன் கேள்வி
Minister Rajmohan's Sharp Reply to Paranthaman's Allegations
"ஒரு விரல் புரட்சி படத்தில், உருட்டுக்கட்டை புரட்சி ஆட்சியில்.." - பரந்தாமன் குற்றச்சாட்டுகளுக்கு ராஜ்மோகன் பதில் என்ன?
Published on: 
Updated on: 
2 min read

புத்தகக் கொள்முதல் ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசின் மீது செய்தியாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவரது விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.

பரந்தாமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன மாதிரி, இந்த பண்டிகை நாட்களில் பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம் தான் அதிகமாக கேட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பண்டிகை தினத்தில் மட்டும் 17 கொலைகள், சட்டம் விரோத சம்பவங்கள் நடந்திருக்கிறது".

"CM சார், பேப்பர் படிக்கிறீர்களா? முந்தய நாள் பேப்பர் படிச்சீங்களா? முந்தய நாள் எங்க இருந்தீங்க? உங்களுடைய சீஃப் செக்ரட்டரி (தலைமைச் செயலாளர்) உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று எங்களுக்கு தகவல் வந்தது. உங்கள் DGP உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல் வந்தது.

காலையில் 10 மணிக்கு வந்து மாலையில் 5 மணிக்கு போகிற பள்ளி குழந்தை வேலை கிடையாது, முதலமைச்சர் வேலை. 24 மணி நேரமும் 7 நாட்களும் (24x7) நீங்கள் தேவைப்படுவீர்கள். ஒரு விரல் புரட்சி படத்தில், உருட்டுக்கட்டை புரட்சி உங்கள் ஆட்சியில், கத்தி படத்தில் தண்ணிக்கு வாய்கிழிய பேசி சண்டை போட்டீர்கள். தண்ணி கேட்டு வந்த பொதுமக்களில் ஒருத்தருக்கு உங்கள் துணை சபாநாயகர் தண்ணி காட்டியிருக்கிறார். ரொம்ப வேதனையாக இருக்கிறது".

"சட்டம் ஒழுங்கை பார்த்துக் கொள்வதற்கு அதிகாரிகள் இன்காம்பிடென்ட்டா (திறமையற்றவர்களாக) இருக்கிறார்களா? அல்லது முதலமைச்சர் இன்காம்பிடென்ட்டா இருக்கிறாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.

உங்கள் கட்சியில் எம்எல்ஏ-வாக இருப்பவர்கள் இதற்கு முன்பு மக்கள் பணி செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தார்களா? என்பது எனக்கு புரியவில்லை.

தலைவனுக்கு ரசிகனாய் இருந்து டிக்கெட் வித்தவன் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் இப்படித்தான் இருக்கும். பெண் IAS ஆபீசர், கலெக்டரிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

அவரெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே கிடையாது." எனக் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த ராஜ்மோகன், "முதல்வரின் ஆட்சியில் யாராக இருந்தாலும் தவறு செய்து குற்றச்சாட்டுக்கு ஆளானால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

விஜய் அவர்களின் ஆட்சி எந்த பாரபட்சமும் இருக்காது.

சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை முன்பை விட அதிகமாக பேட்ரோலை (கண்காணிப்பு ரோந்து) அதிகரித்திருக்கிறார்கள். திட்டமிட்டு இதே போன்ற கூட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ரௌடிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

இன்னும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை இம்ப்ரூவ் பண்ண (மேம்படுத்த) சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்." என்றார்.

மேலும் புத்தக ஊழல் பற்றி பேசுகையில், "ஆயுதங்களை பிடிக்கிற மாதிரி, கள்ளநோட்டை பிடிக்கிற மாதிரி, போதை பொருளை பிடிக்கிற மாதிரி கள்ள புத்தகத்தை பிடித்திருப்பது வேதனையாக இருக்கிறது. கன்னிமாரா நூலகத்திற்குள் 523 குப்பைகளை அவர்கள் சேர்த்திருக்கிறார்கள். அந்த வலை அமைப்பு நீண்ட நாட்களாக இருப்பது, இது ஒரு ஐடியாலஜிக்கல் (சித்தாந்த ரீதியான) பெயிலியர் (தோல்வி)".

"நிர்வாக பிரச்சனை மட்டுமல்ல. காலம் காலமாக பெரியாரின் பெயரை சொல்லி பகுத்தறிவை பேசிவிட்டு பெரியார் அறிவுலகத்திலேயே ஊழல் செய்திருக்கிறார்கள் என்றால் இது ஐடியாலஜிக்கல் பெயிலியர்.

நம்மை பொறுத்தவரை எந்த காம்ப்ரமைசும் இல்லாமல் பை ப்ரோசீஜர் (முறைப்படி) எப்படி எல்லாம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தணுமோ அதை செய்து வருகிறோம்" என்றார்.

Minister Rajmohan's Sharp Reply to Paranthaman's Allegations
துறையூரில் வன்முறை, கள்ளக்குறிச்சியில் ஆபாசம்.. அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்த MLAகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.